வேற்றுமையிலும் விவேகத்துடன் செயல்படுவோம் - மோடி ஜின்பிங் முடிவு

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் மோடி இருவருக்கும் இடையான உரையாடலின் போது, இரு தலைவர்களும், இருவருக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை விவேகத்துடன் கையாளுவதென்றும். வேறுபாடுகள் பிரச்னைகளாக மாறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் இணைந்து முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 | 

நேற்று இந்தியா வந்தடைந்து, பல்லவ கால துறைமுக நகரமான மாமல்லபுரத்தை பார்வையிட்டார் சீன அதிபர் ஜீ ஜின்பிங். அவரது இந்திய பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, பிரதமர் மோடியும் அதிபர் ஜின்பிங்கும் பல சர்வதேச பிரச்சனைகள் குறித்து உரையாடினர்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், "இருநாடுகளும், கலாச்சாரம் பண்பாடு மட்டுமின்றி பல்வேறு வழிகளில் வேறுபட்டு உள்ளன. எங்கள் இருவரின் கருத்துக்களிலும் பல வேறுபாடுகள் இருக்கலாம். எனினும், அவ்வேறுபாடுகளை விவேகத்துடன் கையாளுவதென்றும். வேறுபாடுகள் பிரச்னைகளாக மாறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் இருவரும் இணைந்து முடிவெடுத்துள்ளோம்" என்று கூறினார்.

வுஹான் மாநாட்டை தொடர்ந்து, இருநாடுகளும் வர்த்தக ரீதியாக பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP