Logo

இன்ஸ்டாகிராமில் நடனமாடிய வீடியோ: இளம் பெண் கைது!

இன்ஸ்டாகிராமில் நடனமாடிய வீடியோவை பதிவிட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
 | 

இன்ஸ்டாகிராமில் நடனமாடிய வீடியோ: இளம் பெண் கைது!

தெஹ்ரான்: இன்ஸ்டாகிராமில் நடனமாடிய வீடியோவை பதிவிட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார். 

ஈரான் நாட்டை சேர்ந்த மதே ஹோஜப்ரி என்ற இளம் பெண் தான் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டார். பலர் அதனை ரசித்து பகிர்ந்த நிலையில் போலீசார் அந்தபெண்ணை கைது செய்தனர். 

இதற்கு அந்த நாட்டு மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வெளியிட்டும் வருகிறார்கள். மேலும் "நடனமாடுவது குற்றமல்ல", #Dancingisnotacrime என்ற ஹாஷ்டேக்குடன் ஏராளமான பெண்கள் வீடியோ வெளியிட்டு வருவது தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரான் அரசு பெண்கள் குறிப்பிட்ட ஆடைகளை அணிவதற்கும், ஆண்களுடன் நடனமாடுவதற்கும் கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது. இதில் பெண்கள் தன் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினரைத் தவிர மற்றவர்களுடனோ அல்லது மற்றவர்கள் முன்போ நடனமாடுவது குற்றம் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது. ஹோஜப்ரி பதிவிட்ட வீடியோக்களில் பெண்கள் கட்டாயம் அணிய வேண்டிய பர்தா அணியவில்லை என்பதும் அவர் கைதுக்கான காரணமாக கூறப்படுகிறது. கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP