யூதர்களின் ஆதரவாளரான வெட்டே லுண்டி மரணம்!!!

ஜெருசலேம் : இரண்டாம் உலக போர் காலங்களில், யூதர்களின் ஆதரவாளரும், ஜெர்மனுக்கு எதிரான பிரஞ்ச் எதிர்ப்பின் உறுப்பினர்களுள் ஒருவருமான ஜெருசலேமை சேர்ந்த 103 வயது மூதாட்டியான வெட்டே லுண்டி நேற்று உயிரிழந்தார்.
 | 

யூதர்களின் ஆதரவாளரான வெட்டே லுண்டி மரணம்!!!

ஜெருசலேம் : இரண்டாம் உலக போர் காலங்களில், யூதர்களின் ஆதரவாளரும், ஜெர்மனுக்கு எதிரான பிரஞ்ச் எதிர்ப்பின் உறுப்பினர்களுள் ஒருவருமான ஜெருசலேமை சேர்ந்த 103 வயது மூதாட்டியான வெட்டே லுண்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

கடந்த 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று முன்னாள் வட-கிழக்கு காலனியான பிரஞ்ச் கம்யூனை சேர்ந்த மார்னே துறையில், விவசாய குடும்பத்தில் பிறந்த வெட்டே லுண்டி, 1938 முதல் ஜியாஞ்சி கம்யூனில் இருந்த ஓர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற தொடங்கினார்.

அதன்பின், 1940ஆம் ஆண்டு தொடக்கத்தில், பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளை, நாசி ஜெர்மன்கள் கைபற்றியதை தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக கொரில்லா போர் முறை, புலனாய்வு செய்திகள் போன்ற செயல்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் வெட்டே லுண்டி. 

இவரின் இத்தகைய செயல்களால், 1944ஆம் ஆண்டு கெஸ்டப்போ என்பவரால்  கைது செய்யப்பட்டு ரேவன்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர், வெய்மருக்க அருகேயுள்ள கொமாண்டோ அடிமை தொழிலாளர் பிரிவில் நியமிக்கப்பட்ட இவர், 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரஷ்ய ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிய 103 வயது முடிவடைந்த லுண்டி, அந்நாட்டின் எபர்னே நகரில் கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார். 

இவரின் நினைவு புத்தகமான "தி ஸ்பைடர்ஸ் வெப்" 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு, பிரஞ்சு அரசு, பிரான்ஸ் நாட்டின் மிக சிறந்த விருதுகளுள் ஒன்றான "க்ரான்ட் ஆபிசர் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்" என்ற விருதை இவருக்கு அளித்து இவரை பெருமைப்படுத்தியது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP