ஹொடி மோடி நிகழ்ச்சிக்குப் பிறகு இம்ரான் கானை சந்திக்க இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்துக் கொள்ளும் முன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமரை வரும் திங்கட்கிழமை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 | 

ஹொடி மோடி நிகழ்ச்சிக்குப் பிறகு இம்ரான் கானை சந்திக்க இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்துக் கொள்ளும் முன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமரை வரும் திங்கட்கிழமை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின், ஹூஸ்டன் நகரில், பிரதமர் நரேந்திர மோடிக்காக நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர், வரும் செப் 23.,(திங்களன்று), ட்ரம்ப் நியூயார்கில் வைத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் - ஐ சந்திக்கவிருக்கிறார். அதற்கு மறுதினம், செப் 24., (செவ்வாயன்று), மீண்டும் இந்திய பிரதமர் மோடியுடனான அவரது சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் பிரதமர்களை சந்திக்க உள்ளேன் என ஏற்கனவே ட்ரம்ப் குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்தே, இந்த சந்திப்புகள் உறுதியாகியுள்ளன. 

"ஹௌடி மோடி" நிகழ்விற்கு பின், ட்ரம்ப், ஒஹியோவிற்கு பயணம் மேற்கொள்ளப் போவதாகவும், அங்கே வைத்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருவரையும் சந்திக்கவுள்ளார். மேலும், அடுத்தத்த நாட்களில், பல நாட்டு தலைவர்களை சந்தித்து உரையாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சந்திப்பில் அவர்கள், ஆப்கானிஸ்தான் தீவிரவாதம், பொருளாதாரம், வர்த்தகம், எரிபொருள் ஒப்பந்தங்கள் போன்றவற்றை குறித்து பேசலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்த சந்திப்பு, இவ்வாண்டில், இரு தலைவர்களின், நான்காவது சந்திப்பாக அமைய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP