துனிசியா: அகதிகள் படகில் சென்ற 13 பெண்கள் பலி! 

மத்திய தரைக்கடல் வழியாக சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 13 பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.
 | 

துனிசியா: அகதிகள் படகில் சென்ற 13 பெண்கள் பலி! 

மத்திய தரைக்கடல் வழியாக சென்ற அகதிகள்  படகு  கடலில் கவிழ்ந்த விபத்தில் 13 பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.

துனிசியா நாட்டிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. இந்த படகில் 50 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.  அந்த படகு அங்குள்ள லம்பேடுசா தீவை நெருங்கியபோது, எதிர்ப்பாராத விதத்தில்  கடல் அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் 13 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த இத்தாலி கடற்கரை படையினர், கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 22 பேரை மீட்டனர். மேலும் உயிரிழந்த 13 பெண்களின் சடலமும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையும் தீவிரமாக நடந்து  வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP