டிரம்ப் எனும் வியாபாரி

தொழிலில் லாபம் ஈட்டி அதனை நிரந்தமாக தக்க வைத்துக்கொள்பவன் மட்டும் நல்ல வியாபாரி இல்லை. நஷ்டம் அடைந்து கொண்டிருக்கும் தொழிலை எப்போது நிறுத்த வேண்டும் என்றும் அறிந்திருப்பவன் தான் நல்ல வியாபாரி.
 | 

டிரம்ப் எனும் வியாபாரி

தொழிலில் லாபம் ஈட்டி அதனை நிரந்தமாக தக்க வைத்துக்கொள்பவன் மட்டும் நல்ல வியாபாரி இல்லை. நஷ்டம் அடைந்து கொண்டிருக்கும் தொழிலை எப்போது நிறுத்த வேண்டும் என்றும் அறிந்திருப்பவன் தான் நல்ல வியாபாரி. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் ஒரு நல்ல வியாபாரி என நிரூபித்துள்ளார்.

அமெரிக்க  அதிபர் டிரம்ப் அரசியல் பின்புலத்தில் இருந்து அதிபர் ஆகவில்லை. அவர் பிறவி வியாபாரி. அரசியல் விபத்து காரணமாக அதிபரானவர்.  வியாரியாக இருந்ததால் தான் அவர் தேர்தல் வெற்றிக்கு கூட பரம்பரை எதிரியான ரஷ்யாவின் உதவியை மறைமுகமாக தேடிப் பெற்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உண்மையா என்பது குறித்து அறிய அந்த நாட்டு புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

டிரம்ப் அமெரிக்காவின் ஆட்சியைக் கூட  லாப நஷ்ட கணக்கு பார்த்துதான் நடத்துகிறார்.

டிரம்ப் எனும் வியாபாரி

சமீபத்தில் திடீரென டிரம்ப் ஈராக் சென்றார். அங்கு அவர் அமெரிக்கா இனி அடுத்த நாட்டு விவகாரங்களில் தலையிடாது. பெரியண்ணன் நிலையை தன்  நாடு எடுக்காது என்று உறுதியளித்தார். சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பான முடிவுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலம்  டிரம்ப் நல்ல வியபாரியாக தன்னை அடையாளம் காட்டி உள்ளார்.

பெரியண்ணன் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு, சிரியா, ஈராக், வியட்நாம், வளைகுடா  உள்ளிட்ட பல நாடுகளில் , டிரம்புக்கு முந்தைய அதிபர்களின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்கா தன் ராணுவத்தை நிறுத்தி அந்த நாடுகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவி செய்வதாக சென்ற இடங்களில் எல்லாம் பெரும் குழப்பத்தையே விளைவித்தது.

அத்தகைய முயற்சிகள் அமெரிக்காவிற்கு அரசியல் ரீதியிலும் கூட, நஷ்டங்களையே அதிகமாக விளைவித்தன.

ஒரு புறம் வெளிநாட்டு அகதிகள் தொல்லை. இன்னொருபுறம் வெளிநாட்டில் படைகளை நிறுத்தி இருப்பதால் ஏற்படும் கூடுதல் செலவுகள். இப்படி அமெரிக்காவிற்கு இருபுறமும்  செலவுகள் வரம்பு மீறி போய்விட்டன.

ஒரு புறம் அமெரிக்காவின் எதிரியான ரஷ்யா உடைத்து நொறுங்கிய பின்னர், தான் தான் உலகின் எல்லா நாடுகளையும் காக்க வந்தவர் என்ற நினைப்பே அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு அடி கோலியது. இதற்காக அந்த நாடு கொடுத்த விலை மிக மிக அதிகம். 

இந்த சூழ்நிலையில் தான் யாரும் எதிர்பாரத வகையில் தொழிலதிபர் டிரம்ப் அதிபராக அமர நேர்கிறது. பொதுவாக வியாபாரிகள் தங்கள் ரோஷத்திற்காக, பொருளை இழக்கமாட்டார்கள். call me dog, pay me high  என்பதுதான் அவர்களின் வாழ்வியல் இலக்கணம். டிரம்ப்பிற்கும் அது.பொருந்தும்.

வெளிநாட்டினர் அமெரிக்காவில் புகுவதை தடுக்க சுவர் கட்டப் போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு தேவையான தொகையை திரட்டுவதில் சிக்கல்.

டிரம்ப் எனும் வியாபாரி

வடகொரியா அணு ஆயுதங்கள் தயாரிப்பில் மிரட்டல் விடுவது மட்டுமின்றி, தேர்தலில்  ரஷ்யாவின் ஆதரவை பெற்றது, வெளிநாட்டுக்காரர்கள் நாட்டிற்குள் வந்து வேலைவாய்புகளை பறித்துக் கொண்டது என்று உள்நாட்டிலேயே தொடர்ந்து நிலவி வரும் தீர்க்கப்படாத  பிரச்னைகள் டிரம்பிற்கு ஏராளம் உள்ளன.. இந்தியாவில் மத்தியஅரசுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாதது போலவே , டிரம்பிற்கும் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் விரைவில் ஏற்பட உள்ளது . அதனால் தான் தான் நினைத்ததை எல்லாமல் நிறைவேற்ற முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் நல்ல வியாபாரி. வர்த்தகம் நடைபெற வேண்டும். உள்ளதும் போய்விடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளார்.

இன்னொருபுறம், சீனாவின் சர்வதேச வர்த்தக வளர்ச்சி, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உலக அளவில் கிடைத்து வரும் பிடிமானம் என்று அமெரிக்காவை பல நாடுகள் ஓரம் கட்டி வருகின்றன.

டிரம்ப் எனும் வியாபாரி

ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்க இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தடைவிதித்து பார்த்தார். அதற்கு கெடுவேறு விதித்தார். ஆனால் இந்தியாவோ அதைப்பற்றி கவலையே படவில்லை. இதற்கு முன்னர் வாஜ்பாய் கால ஆட்சிக் காலத்தில், இந்தியா அணு ஆயுதத்தை பரிசோதனை செய்த போது அமெரிக்கா, நம்நாடு மீது விதித்த பொருளாதாரத் தடை கேலிக் கூத்தாக முடிந்தது. அதன் பிறகுதான் இந்தியா தெளிவாக நவீன தொழில்நுட்பங்களில் தன்னிறைவை நோக்கி பீடு நடைபோடத் தொடங்கியது. அமெரிக்காவின் தற்போதையை தடையையும் ஊதித் தள்ளிவிடலாம் என்று இந்தியா தெளிவாக இருந்தது. இதை புரிந்து கொண்டதால் தான் கெடுவிதித்த பின்னரும் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு தடையில் இருந்து அமெரிக்கா  தானாகவே  விலக்கு அளித்தது. அதன் பின்னர் அதைப் பற்றி , இதுவரை பேசவே இல்லை.

வடகொரியாவை அழைத்து பேசி அணுஆயுதங்கள் தயாரிக்க மாட்டோம் என்று உத்திரவாதம் வாங்கிய பின்னரும், அந்த நாடு அந்த அளவிற்கு கொடுத்த வாக்குறுதியை காப்புற்றுமா என்ற அவநம்பிக்கையை நிலவி வருகிறது.

மேலும் இந்திய அரசுக்கு இருந்து வரும் அமெரிக்க டாலர் பற்றாக்குறையைப் போக்க, ஜப்பான் அரசு 50 பில்லியன் டாலர் நிதியை கடனாக அல்லாத, கையிருப்பு உதவியாக , இந்தியாவுக்கு வழங்க ஒப்புக்கொண்டு வழங்கி வருகிறது.  அதுமட்டுமின்றி டாலர் மட்டுமே சர்வதேச பரிவர்த்தனைக்கு  என்று இருந்து வந்த  நிலையில், முன்பு நடைபெற்று வந்த ரூபாயில் வர்த்தகம்  என்ற வழக்கத்தின் அடிப்படையில், மீண்டும் ரூபாய் அடிப்படையில் கச்சா எண்ணையை இந்தியாவிற்கு விற்பனை செய்ய இரான் அரசு  தற்போதும் ஒப்புக் கொண்டுள்ளது.இதன் மூலம் டாலரின் முக்கியத்துவம் இயல்பாக குறைந்து வருகிறது.   இது போல உலக நாடுகள் ஒவ்வொன்றும் அந்த நாட்டின் பணத்தை அடிப்படையாக கொண்டு பரிவர்த்தனை செய்யத் தொடங்கினால் அமெரிக்காவின் பொருளாதாரம் அடிமட்டத்திற்கு போய்விடும்.

இப்படி எல்லா திசையிலும் உலக அளவில் அமெரிக்காவின் பிடிமானம் குறைந்து வருகிறது. இந்த யதார்த்தத்தை கண்டுதான் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரியண்ணன் வேலையை விடப் போவதாக அறிவித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் ஓர் அரசியல்வாதியாக இருந்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். வளைகுடாப் போர் போல மீண்டும் ஒன்றை தொடங்கி அமெரிக்காவின் கஜானாவையும் காலி செய்து , மக்களையும் கொன்று தீர்த்து இருப்பார். வியாபாரி டிரம்ப் அப்படி செய்யாதது அமெரிக்காவிற்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகள் பலவற்றிற்கு நல்லதாக அமைந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP