சீனா மீது விசா தடை விதிக்க முடிவு - ட்ரம்ப் அதிரடி!!

உய்குர் இன மக்களை காரணமில்லாமல் கைது செய்து வைத்திருப்பதாக கூறி, சீனாவுடனான வணிக உறவை நிறுத்த போவதாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, விசா தடைகளையும் விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
 | 

சீனா மீது விசா தடை விதிக்க முடிவு - ட்ரம்ப் அதிரடி!!

சீனா மீது விசா தடை விதிக்க முடிவு - ட்ரம்ப் அதிரடி!!

உய்குர் இன மக்களை காரணமில்லாமல் கைது செய்து வைத்திருப்பதாக கூறி, சீனாவுடனான வணிக உறவை நிறுத்த போவதாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, விசா தடைகளையும் விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சீனாவின் ஜின்ஜியாங் நகரில், முஸ்லீம் மதத்தை சேர்ந்த, 1 லட்சம் உய்குர் இன மக்களை காரணமில்லாமல் கைது செய்து வைத்திருப்பதாகவும், இந்நிலை தொடர்ந்தால், சீனாவுடனான வணிகம் நிறுத்தப்படும் எனவும் கூறியிருந்த அமெரிக்கா, தற்போது சீன அரசின் மீது விசா தடைகளும் விதிக்க முடிவு செய்துள்ளது.

1949ஆம் ஆண்டு. சீனா, கிழக்கு துருக்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நாள் முதல், துருக்கி நாட்டை சேர்ந்த உய்குர் இன மக்கள், சீனாவின் தன்னாட்சி நகரமான ஜின்ஜியாங்கிற்குள் வரத்தொடங்கினர். இன்று, ஜின்ஜியாங்கின் மக்கள் தொகையில் 45 சதவீதம் வகித்து வருங்கின்றனர் உய்குர்கள். ஆனால், சமீப காலமாக அவர்களது ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், தங்களது கலாச்சாரம் அழிந்து விடுமோ என்ற பயத்தில், ஜின்ஜியாங் அரசு அவர்களை கைது செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜின்ஜியாங் அரசு, "நாங்கள் எந்த இன மக்களையும் கைது செய்யவோ, துன்புறுத்தவோ இல்லை. அமெரிக்காவின் இந்த தடைகள் அனைத்தும் தேவையில்லாமல் விதிக்கப்பட்டவை" என கூறியுள்ளது. அமெரிக்காவிலுள்ள சீன நாட்டின் தூதரகம், பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் சீன மண்ணிலிருந்து ஒழிக்கவே சீனா முயல்கிறது. சிறுபாண்மை இன மக்களை தாக்குவது எங்களின் நோக்கமில்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, உய்குர் இன மக்களை, சீன அரசு காரணமில்லாமல் கைது செய்து வைத்திருப்பதாக கூறி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவுடனான வணிக உறவை நிறுத்தியதோடில்லாமல், விசா தடைகளையும் விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முஸ்லீம் இன மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, இது குறித்து சீன அரசுடன் உரையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இவரின் இந்த முடிவு, சீனாவை சேர்ந்த தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதால், சீன அரசு மிகுந்த வருத்ததிற்கு உள்ளாகியுள்ளது.

துருக்கியை சேர்ந்த உய்குர் இன மக்களுக்காக, அமெரிக்கா சர்வதேச அளவில் போராடி வரும் நிலையில், அதிபர் ரிசெப் தயிப் எர்டேகன், சீனாவில் உய்குர்கள் மகிழ்ச்சியாக தான் இருக்கின்றனர் என்றும் சீன தூதரகத்தின் கருத்துக்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவை தவிர எந்த நாடும் இது குறித்து ஒரு கேள்வியும் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP