Logo

தீபாவளி கொண்டாடிய டிரம்ப் - மோடி சிறந்த நண்பர் என பெருமிதம்!

டிரம்ப் அரசு நிர்வாகத்தில் பணியாற்றுகின்ற 20க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள், அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சிங் சர்னா, அவரது மனைவி அவினா சர்னா உள்ளிட்டோர் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 | 

தீபாவளி கொண்டாடிய டிரம்ப் - மோடி சிறந்த நண்பர் என பெருமிதம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தனக்கு சிறந்த நண்பர் என்று அவர் குறிப்பிட்டார். உயர் பதவிகளில் உள்ள இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது டிரம்ப் பேசியதாவது:

இந்திய தேசத்துடன் அமெரிக்கா மிக ஆழமான நட்புறவை கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடனான நட்புக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அமெரிக்காவுக்கான சிறந்த வர்த்தகராக இந்தியா விளங்குகிறது. வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தைக்கு அவர்கள் சிறந்தவர்கள். மிக சிறப்பானவர்கள் என்பதாலேயே இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அது இனியும் தொடரும் என்றார் டிரம்ப்.

டிரம்ப் அரசு நிர்வாகத்தில் பணியாற்றுகின்ற 20க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள், அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சிங் சர்னா, அவரது மனைவி அவினா சர்னா உள்ளிட்டோர் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, டிரம்ப் தனது மகள் இவாங்காவை அறிமுகப்படுத்திய அவர், “மோடி எனது நண்பர். இப்போது இவருக்கும் நண்பர். இந்தியா மீதும், இந்திய மக்கள் மீதும் மிகுந்த மரியாதை அவர் கொண்டிருக்கிறார்’’ என்று தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP