மக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு அவர்கள் தான் உரிமையாளர்கள் - பிரதமர் மோடி

மக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு அவர்கள் தான் உரிமையாளர்கள். இந்திய அரசு அவர்களின் தகவல்களை பாதுகாப்பதோடு, தேவையான அளவு தனிப்பட்ட சுதந்திரம் அளிக்கவும் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது என இந்திய பிரதமர் கூறியுள்ளார்.
 | 

மக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு அவர்கள் தான் உரிமையாளர்கள் - பிரதமர் மோடி

"மக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு அவர்கள் தான் உரிமையாளர்கள். இந்திய அரசு அவர்களின் தகவல்களை பாதுகாப்பதோடு, தேவையான அளவு தனிப்பட்ட சுதந்திரம் அளிக்கவும் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது" என இந்திய பிரதமர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்தில் கலந்துக் கொள்ள நியூயார்க் பயணம் மேற் கொண்டுள்ள பிரதமர் மோடி, ஐபிஎம் தலைவர் ஜின்னி ரோமெட்டி மற்றும் மாஸ்டர்கார்ட்ஸின் தலைவர் அஜய் பங்கா உட்பட 40 சர்வதேச நிறுவனங்களின் சிஇஓ க்களை கடந்த புதன்கிழமையன்று சந்தித்து உரையாடினார். 

இந்தியாவின் "டேட்டா லோக்கலைசேஷன்" குறித்தே அவர்களில் பலரது கேள்விகளும் இருந்தன. அதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, "இனி வரும் காலங்களில் மக்களின் தகவல்களை உபயோகிக்கலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கும் பொறுப்பை மக்களிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். எனினும், அது குறித்த முழு தீர்மானங்களும் இனி எடுக்கப்படாத காரணத்தால், தற்சமயம் இவ்வளவு தான் கூற இயலும். 5 ஆண்டு பதவியில், பதவியேற்று 3 மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில், இது குறித்து ஆலோசிக்கவும் விவாதிக்கவும் எங்களுக்கு இன்னும் நிறைய உள்ளன" என்று கூறினார்.

"தி ஹோட்டல் செயின்ஸ்" தலைவரும் சிஇஓ வுமான ஆர்னே சோரென்சன் கூறுகையில், "முன்பு இந்தியாவில் வணிகம் மேற்கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. இந்தியாவில் சுற்றுலா தளங்களை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி சுதந்திர தின உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தார். அதன் பணிகளும் வேகமாக நடைபெற்றால், அதிலும் நாங்கள் எங்கள் முதலீட்டை தொடங்க தயாராக இருக்கிறோம்" எனக் கூறினார்.

மேலும், பல நிறுவனங்களின் தலைவர்களும், இந்தியாவுடனான வர்த்தகம் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இனி வரும் காலங்களில், இந்தியாவுடனான வர்த்தக உறவை மேலும் வளர செய்யும் நோக்கம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP