காஷ்மீர் பதற்றத்திற்கு இவர்கள்தான் காரணம்: என்.ஐ.ஏ., வெளியிட்ட பகீர் ஆதாரங்கள்!

பயங்கரவாதத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உலகநாடுகளிடம் நீலிக்கண்ணீர் வடித்த பாகிஸ்தானின் போலி வேஷம் கலைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவன் யாசின் மாலிக் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட பின், பாகிஸ்தானுக்கு எதிரான ஆதாரங்கள், தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

காஷ்மீர் பதற்றத்திற்கு இவர்கள்தான் காரணம்: என்.ஐ.ஏ., வெளியிட்ட பகீர் ஆதாரங்கள்!

உலகத்தரம் வாய்ந்த ஆப்பிள்கள், சற்றும் குறை கூறமுடியாத குங்குமப்பூ, பல வகை மலர்கள், இன்னும் பல காய் கனிகள் விளையும் பூமி, ஜம்மு - காஷ்மீர். இதில், காஷ்மீரில் இன்னும் சிறப்பு அதன் சீதோஷண நிலை. குளுகுளு மலை சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ள காஷ்மீரை குட்டி ஸ்விட்சர்லாந்து என்றே அழைக்கலாம். 

இதமான சூழல், இன்பம் தரும் சுற்றுலாத்தலங்கள் என எத்தனையோ இருந்தும், உள்நாடு முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரை இங்கு வருவதென்றால் தங்கள்  உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் வர வேண்டும் என்ற சூழல். 

ஹிந்துக்களின் புனித தலமான, ஸ்ரீ வைஷ்ணோ தேவி கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும் சரி, அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதாக இருந்தாலும் சரி, கைலாஷ், மானசரோவர் யாத்திரைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களின் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இருந்தது இல்லை. ஹிந்துக்கள் மட்டுமல்ல, அப்பகுதிக்கு செல்லும் அல்லது அங்கு காலம் காலமாக வசிக்கும் முஸ்லீம் அல்லது எந்த மதத்தினராக இருந்தாலும் சரி. அவர்களுக்கும் இதே நிலைதான். 

ஆன்மிக பூமி, சுற்றுலா தலம், வர்த்தக மையம் என ஆயிரம் வாய்ப்புகள் இருந்தாலும், காஷ்மீர் ஏனோ, மனித உயிர்களை காவு கேட்கும் கொடூர பூமியாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் காரணம், பிரிவினைவாதிகள். 

ஆம், இவர்களுக்கென்று எந்த லட்சியமும் இல்லை. மதத்தின் பெயரில் மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்கள், சிறுவர்களை இந்திய அரசுக்கு எதிராக தூண்டிவிடப்பட்டு, அங்கு அமைதியை சீர்குலைப்பதே அவர்களின் பிரதான நோக்கம். இதில் முக்கிய கூட்டாளி பாகிஸ்தானும், அந்நாட்டு ஆதரவில் இயங்கும் பயங்கரவாதிகளுமே. 

அப்படிப்பட்ட அமைப்புகளின் கிளை அமைப்புகள்தான் காஷ்மீரில் பதற்றத்தை உண்டுபண்ணும் பிரிவினைவாத அமைப்புகள். தற்போது அவ்வகை பிரிவினைவாதிகளை இனம்கண்டறிந்து அவர்களை கைது செய்து நடத்தப்பட்டவிசரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பயங்கரவாதத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உலகநாடுகளிடம் நீலிக்கண்ணீர் வடித்த பாகிஸ்தானின் போலி வேஷம் கலைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவன் யாசின் மாலிக் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட பின், பாகிஸ்தானுக்கு எதிரான ஆதாரங்கள், தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, காஷ்மீர் பயங்கரவாத நிதியுதவி வழக்காக தொடங்கப்பட்ட வழக்கில், லாஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த ஹஃபிஸ் சயித் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். ஆனால், மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னனி அமைப்பின் தலைவன் யாசின் மாலிக், ஜம்மு-காஷ்மீர் சுதந்திரக  ஜனநாயக கட்சியை சேர்ந்த ஷாபிர் அஹமத் ஷா, ஜம்மு காஷ்மீர் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த மஸ்ரத் அலாம், துக்தாரன்-இ-மிலாத் அமைப்பை சேர்ந்த சையதா ஆசியா ஆண்ட்ராபி மற்றும் அப்துல் ரஷித் ஷைக் ஆகியோரும் முக்கிய குற்றவாளிகள் என கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களும் தேடப்பட்டு வந்தனர்.

இந்திய உளவுத்துறையின் இந்த தீவிர தேடுதல் வேட்டையினால், குற்றம் சுமத்தப்பட்ட பிரிவினைவாதிகளுக்கு, பாகிஸ்தான் நிதியுதவி செய்து வந்ததும், ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் தீவிரவாதத் தாக்குதலுக்கு உதவி வந்ததும் தெரிய வந்துள்ளது. இதற்கு ஆதாரங்களாக 400 மின்னணு சாதனங்களையும், 85  ஆவணங்களையும் உளவுத்துறையின் கையில் சிக்கியுள்ளன. மேலும், எஸ்.எம்.எஸ் குறுஞ்செய்திகள், இ-மெயில்கள், வாட்ஸ்ஆப் மெசேஜ்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்து ஆதாரங்களையும் உளவுத்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உளவுத்துறையிடம் உள்ள வீடியோக்களில், ஜம்மு காஷ்மீர் மக்களிடம் இந்திய அரசை குறித்து தவறான வதந்திகள் பரப்புதல், பிரிவினைவாதத்தை உண்டாக்கும் வகையான பேச்சுக்கள், பயங்கரவாதிகளுடன் இணைந்து திட்டமிடுதல், பாகிஸ்தான் அதிகாரிகளுடனான உரையாடல் என அனைத்தும் பதிவாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.மேலும், கைது செய்யப்பட்ட யாசின் மாலிக், பாகிஸ்தானிடமிருந்து பிரிவினைவாதத்தை பரப்புவதற்காக நிதியுதவி பெற்று வந்ததும் நிரூபனமாகியுள்ளது.

சர்வதேச நிதியத்தின் கீழ் வரும் பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு, தீவிரவாதத்திற்கு நிதியுதவு செய்து வருவதாகவும்,  முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தானை, இது குறித்து விளக்கம் கேட்டு, சந்தேகப்பட்டியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், தற்போது கிடைக்கப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களும் பாகிஸ்தானிற்கு எதிராக உள்ளதால், மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது பாகிஸ்தான்.

Newstm.in

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP