ஆர்.சி.ஈ.பி யின் நோக்கமும் பின்னனியும்!!!

கடந்த 2012ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், இந்த அமைப்பில் உள்ள 16 நாடுகளுக்கும் மத்தியில் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். இதில் பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடாக திகழ்வது சீனா. அதற்கு அடுத்த படியாக இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் அமைய பெற்றிருக்கும்.
 | 

ஆர்.சி.ஈ.பி யின் நோக்கமும் பின்னனியும்!!!

பிராந்திய விரிவான கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.ஈ.பி, புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மற்றும் வியட்நாம் ஆகிய ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளுடன், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய  எப்.டி.ஏ உறுப்பினர் 6 நாடுகளும் இணைந்து அமையப்பெற்றது. 

கடந்த 2012ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், இந்த அமைப்பில் உள்ள 16 நாடுகளுக்கும் மத்தியில் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். இதில் பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடாக திகழ்வது சீனா. அதற்கு அடுத்த படியாக இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் அமைய பெற்றிருக்கும். 

இதன் 3வது பிராந்திய கூட்டுறவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தான் தற்போது தாய்லாந்து பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. எனினும், இதன் தற்போதைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் நோக்கங்களை பிரதிபலிக்காத காரணத்தினால் அதனுடன் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மோடி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP