Logo

இந்த குடுவையின் விலை ரூ.125 கோடி!

பரணில் கிடந்த குடுவையை பிரான்சில் ரூ. 125 கோடிக்கு ஏலம் எடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
 | 

இந்த குடுவையின் விலை ரூ.125 கோடி!

பரணில் கிடந்த குடுவையை பிரான்சில் ரூ. 125 கோடிக்கு ஏலம் எடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அவர்கள் வீட்டின் பரணில் இருந்த காலணி வைக்கும் பெட்டிக்குள் இருந்து பீங்கானால் செய்யப்பட்ட குடுவை ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட அக்குடுவை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரியவந்ததையடுத்து அதனை ஏலம் விட முடிவெடுத்துள்ளனர். இந்த அரிய கலைப் பொக்கிஷத்தை உலகப் புகழ் பெற்ற Sotheby ஏல நிறுவனம் அண்மையில் ஏலத்தில் விட்ட போது யாரும் எதிர்பாராதவிதமாக கடுமையான போட்டியை அந்த பீங்கான் குடுவை ஏற்படுத்தியது.

கலைப் பொக்கிஷ சேகரிப்பாளர்கள் பலருக்கு இடையில் சுமார் 25 நிமிடங்கள் நீடித்த ஏலத்தின் முடிவில் ரூ.128 கோடி அந்த குடுவை ஏலத்தில் எடுக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீன பீங்கான் கலைப் பொருள் ஒன்று இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து அந்த ஏல நிறுவனத்தின் தலைவர் ஹென்றி கூறும்போது, சீன கலைப்பொருட்கள் வியப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் ஐரோப்பா முழுவதும் அவற்றை பல நூற்றாண்டுகளாக சேகரித்து வருகின்றனர். இருப்பினும் அவை கடந்த காலங்களில் பெரிய அளவில் வரவேற்பை பெறத் தவறிவிட்டன. தற்போது இந்த ஏலம் அதனை உடைத்தெரிந்துள்ளது என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP