Logo

3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி திறந்து பார்க்கப்பட்டது!

எகிப்து நாட்டில் முதன் முறையாக பதப்படுத்தப்பட்ட மம்மிகளைக் கொண்ட சவப்பெட்டிகள் திறந்து பார்க்கப்பட்டுள்ளன. அதில் 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எகிப்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவரின் உடல்கள் இருந்தன.
 | 

3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி திறந்து பார்க்கப்பட்டது!

எகிப்து நாட்டில் முதன் முறையாக பதப்படுத்தப்பட்ட மம்மிகளைக் கொண்ட சவப்பெட்டிகள் திறந்து பார்க்கப்பட்டுள்ளன. 

மம்மி என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிப்பதாகும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து வருகின்றனர். எகிப்தில் மட்டும் நூறு கோடி விலங்குகளின் மம்மிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  ஆனால் மனித மம்மிகள் இதுவரை திறந்துப்பார்த்தது கிரையாது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளிலேயே மிகவும் பழையது 1940 இல் வட அமெரிக்காவில் கண்டுபிடுக்கப்பட்ட மம்மிக்கலாகும். அவை 9400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லக்சர் நகரில் ஆய்வு மேற்கொண்ட பிரெஞ்சு தொல்பொருள் ஆய்வாளர்கள் சுமார் 300 மீட்டர் தூர இடிபாடுகளை 5 மாத கால முயற்சிகளுக்குப் பின் அகற்றி ஒரு பழங்கால கல்லறையைக் கண்டுபிடித்தனர். அதில் இரண்டு சவப்பெட்டிகள் இருந்த நிலையில் அவற்றை அவர்கள் திறந்து பார்த்தனர். அவற்றில் துயா என்ற பெண் உட்பட 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எகிப்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவரின் உடல்கள் இருந்தன. மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மரம் மற்றும் களிமண்ணால் ஆன பொம்மைகளும் இருந்தன.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP