Logo

ஒரு கிலோ தக்காளியின் விலை 3500! கதறும் வெனிசுவேலா மக்கள்

வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார குறைவு காரணமாக அந்நாட்டின் பணமான பொலிவரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அந்த நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களை வாங்க அதிக பணம் செலவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 | 

ஒரு கிலோ தக்காளியின் விலை 3500! கதறும் வெனிசுவேலா மக்கள்

வெனிசுவேலாவின் பணமதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அந்நாட்டிற்கான புதிய பணத்தை அதிபர் நிக்கோலஸ் மதுரோ விரைவில் வெளியிடவுள்ளார்.

வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார குறைவு காரணமாக அந்நாட்டின் பணமான பொலிவரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அந்த நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களை வாங்க அதிக பணம் செலவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோ தக்காளியின் விலை  50 லட்சம் பொலிவர்களாக உயர்ந்துள்ளது. ஒரு இந்திய ரூபாய்க்கு 3557 பொலிவார் நிகர் என்ற கவலைக்கிடமான நிலைக்கு வெனிசுவேலா தள்ளபட்டுவுள்ளது. வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸில் 2.4 கிலோ கோழிக்கறி விலை 1.46 கோடி பொலிவர்க்கு விற்க்கபடுகிறது. கடந்த வியாழக்கிழமை ஒரு கழிப்பறை தாள் 26 லட்சம் பொலிவர்களுக்கு விற்கப்பட்டது.

வெனிசுவேலாவின் புதிய பணம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அதுசார்ந்து நிலவும் குழப்பங்கள், கவலைகள் காரணமாக அந்நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு கிலோ அரிசியின் விலை 25 லட்சம் பொலிவர்களாக இருப்பது வியக்கவைக்கிறது.

கடந்த ஜூலை மாதம் வெனிசுவேலாவின் பணவீக்கம் 82,700 சதவீதத்தை எட்டியது. ஒரு பாக்கெட் சானிட்டரி நாப்கின்களுக்கு 35 லட்சம் பொலிவர்கள் செலவிட வேண்டியிருக்கும். ஒரு கிலோ பாலாடைக்கட்டியின் விலை 75 லட்சம் பொலிவர்கள். குழந்தைகள் அணியும் நேப்பிஸ் விலை 80 லட்சம் பொலிவர்கள். ஒரு கிலோ மாட்டுக்கறியின் விலை 95 லட்சம் பொலிவர்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP