Logo

கற்கால மனிதர்களின் சுவரோவிய குகை...!

பிரான்ஸ் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழைய கற்கால ஆதி மனிதர்களால் வரையப்பட்ட சுவரோவியங்களும், கலை வேலைப்பாடுகளும் நிறைந்த அபூர்வ குகை, தான் சுவர்ரோவிய குகை.
 | 

கற்கால மனிதர்களின் சுவரோவிய குகை...!

பிரான்ஸ் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழைய கற்கால ஆதி மனிதர்களால் வரையப்பட்ட சுவரோவியங்களும், கலை வேலைப்பாடுகளும் நிறைந்த அபூர்வ குகை, தான் சுவர்ரோவிய குகை. 
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கில் டொர்டோன் என்ற பகுதியில் உள்ள மான்டிஞாக் கிராமம் அருகே இந்தக் குகை அமைந்துள்ளது.  இங்கு 600-க்கும் மேற்பட்ட அரிய சுவரோவியங்களும், ஆயிரத்து 400க்கும் அதிகமான சிற்ப வேலைப்பாடுகளும் கொண்ட அதி அற்புத கலைப் பொக்கிஷமாக இந்தக் குகை திகழ்கிறது.  

கற்கால மனிதர்களின் சுவரோவிய குகை...!

புராதன கலைப் புதையல் போன்ற இந்த அதிசய குகையின் மற்றோரு பெயர்   லசாக்ஸ் கேவ் என்று அழைக்கப்படுகிறது. பழங்கால மனிதர்கள் இந்தக் குகையின் உட்புறச் சுவர்களில் வரைந்துள்ள 600-க்கும் மேற்பட்ட சித்திரங்களில் பெரிதும் இடம் வகிப்பவை விலங்குகளே. அவற்றில், மிக அதிக அளவில் விதவிதமான குதிரைகள் இடம்பெற்றுள்ளன.  இது மட்டுமல்ல அதற்கு அடுத்தபடியாக பலவித மான்கள், காட்டு ஆடுகள், மலை ஆடுகள், பைஸன் எனப்படும் காட்டு எருமைகள் மற்றும் சில வகை பூனைகளும் வரையப்பட்டுள்ளன. 

கற்கால மனிதர்களின் சுவரோவிய குகை...!

இதுதவிர சில சிங்கங்களும், கரடிகளும்கூட, இந்த ஓவியங்களில் இடம்வகிக்கின்றன. அதிசயமாக மனிதன் உருவம் ஒன்றும், சிறுத்தைத் தோல், மானின் வால், காட்டெருமையின் திமில், இரட்டைக் கொம்பு கொண்ட வினோத விலங்கின் உருவம் ஒன்றும்கூட  வரையப்பட்டுள்ளன. இந்த வண்ண ஓவியங்கள் எல்லாம் கிறுக்கல்கள் அல்ல, தற்போதைய சிறந்த ஓவியர்களுக்கே சவால் விடும் வகையிலான உயிரோட்டமான சித்திரங்கள் என்பது மறுப்பதற்கில்லை. இங்கு குகைச் சுவரின் மூலை முடுக்குகள், வளைவு நெளிவுகள் ஆகியவற்றுக்குத் தகுந்தபடி ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட சிற்ப வேலைப்பாடுகளையும் பழங்கால மனிதர்கள் செதுக்கியுள்ளனர்.  

கற்கால மனிதர்களின் சுவரோவிய குகை...!

இந்தக் குகையில்  உள்ள பொருட்கள் சுமார் 17 ஆயிரத்தில் இருந்து 19 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. சுண்ணாம்புக் கற்களாலான விளக்குகளில் மிருகங்களின் கொழுப்புகளை எண்ணெய்யாகப் பயன்படுத்தி, அதன் வெளிச்சத்தில் இந்தச் சுவரோவியங்களும், சிற்ப வேலைப்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.

கற்கால மனிதர்களின் சுவரோவிய குகை...!

இயற்கைப் பொருட்களால் கிடைக்கும் சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு ஆகிய மூவண்ணங்களைப் பயன்படுத்தி சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன.  இதில் சித்திரங்களை வரைவதற்காகவே இந்தக் குகையை ஆதிமனிதர்கள் பயன்படுத்தியுள்ளதாகவும், இதனை நிரந்தர இடமாக அவர்கள் பயன்படுத்தவில்லை என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

கற்கால மனிதர்களின் சுவரோவிய குகை...!

கை விரல்கள் அல்லது கரித்துண்டுகளைப் பயன்படுத்தி சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. இத்தனைச் சிறப்பு மிக்க கலைப் புதையல் போன்ற குகை இருப்பது, 1940-ஆம் ஆண்டில் தான் கண்டறியப்பட்டது.  இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்துக்கு கலை விருந்து படைக்கும் வகையில் உள்ளது. அறிவியல் வளர்ச்சி பெறாத அந்தக் காலத்தில் ஆதி மனிதர்கள் உருவாக்கிய அற்புதக் கலைப் படைப்புகளைப்போல் நம்மால் இப்போது படைக்கமுடியாவிட்டாலும் பரவாயில்லை, அவற்றை இழந்துவிடாமல் காப்பாற்ற வேண்டியது  அனைவரின் கடமை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP