தாலிபான்கள் தாக்குதல் - ஆப்கன் வீரர்கள் 25 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாந்த் மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் மீது தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலின்போது தற்கொலைப் படையைச் சேர்ந்த மூவர் உள்பட 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 | 

தாலிபான்கள் தாக்குதல் - ஆப்கன் வீரர்கள் 25 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாந்த் மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் மீது தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலின்போது தற்கொலைப் படையைச் சேர்ந்த மூவர் உள்பட 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படை அதிகாரிகள் கூறியதாவது:

தாலிபான் தீவிரவாதிகள் ராணுவ முகாமுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கினர். முதலில், தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவர், உணவக அறையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதையடுத்து, மோதல் வெடித்தது. தாக்குதல் நடைபெற்ற அதே ராணுவ தளத்தில்தான், பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பான அமெரிக்க ஆலோசனை இயக்கமும், வெளிநாட்டுப் படையினரும் தங்கியிருந்தனர்.

எனினும், வெளிநாட்டு படைகள் உள்ள சுவரை நோக்கி தாலிபான் தீவிரவாதிகள் முன்னேறிவிடாமல் தடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக தாலிபான் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கத்தாரில் பேச்சுவார்த்தை நடைபெற்று நிலையிலும், இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP