இந்தியா- யுஏஇ இடையே 2 ஒப்பந்தகளில் கையெழுத்திட்டார் சுஷ்மா!

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்ற இந்திய- ஐக்கிய அமீரக நாடுகளுக்கு இடையேயான கூட்டுக்குழு கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையே இரு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
 | 

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அரசு முறை சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரண்டு நாட்கள் சென்றிருந்தார். அங்கு இந்தியா- ஐக்கிய நாடுகளுக்கிடையே நிலவும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பான 12ஆவது குழுக்கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின்னும் கலந்துகொண்டார். அப்போது  இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் அமெர்க்க டாலருக்கு மாற்றாக இரு நாடுகளின் பணத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் உள்பட 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் இரு நாடுகளுக்கிடையே நிலவிவரும் நட்புறவு, பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, முதலீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP