Logo

பெல்ஜியம் பிரதமர் திடீர் பதவி விலகல்!

பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வர 5 மாதங்கள் உள்ள நிலையில் தற்போது பிரதமர் ராஜினாமா செய்திருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பெல்ஜியம் பிரதமர் திடீர் பதவி விலகல்!

பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெல்ஜியம் பிரதமராக இருந்த சார்லஸ் அரசுக்கு பெல்மிஸ்ட் தேசிய கட்சி ஆதரவளித்து வந்தது. இந்நிலையில், உலகளாவிய அகதிகள் தொடர்பான ஐ.நா ஒப்பந்த விவகாரத்தில் கட்சியினரிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து சார்லஸ் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணியில் இருந்து வாபஸ் பெற்றது. இதனால், மைனாரிட்டி அரசாக இருந்த சார்லஸ்க்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. 

இதனிடையே, பிரதமர் சார்லஸ் மைக்கேல், மன்னர் பிலிப்பிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வர இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், தற்போது பிரதமர் பதவி விலகியிருப்பது அந்நாட்டு அரசியிலில் குழப்பத்தை ஏற்பத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP