நிறுத்துங்க... நான் இன்னும் ஏறவில்லை! விமானத்தை துரத்தி சென்ற நபர்

அயர்லாந்து நாட்டில் விமான நிலையத்தின் ஓடுதளத்தில் விமானம் புறப்பட்டவுடன் திடீரென ஒரு இளைஞர் துரத்துச் சென்றது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

டப்ளின் விமான நிலையத்திலிருந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்கு செல்லும் விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்டது. அப்போது, 20 வயதான இளைஞர் ஒருவர் தான் இன்னும் ஏறவில்லை என்றும் உடனே விமானத்தை நிறுத்துமாறும் கூச்சலிட்டுக்கொண்டே தனது உடைமையுடன் விமானத்தை நோக்கி ஓடினார். இதைபார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விமானத்தில் பயணிக்க இருந்ததாகவும், உரிய நேரத்தில் வராததால் பயணிக்க முடியாமல் போனதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை விமான நிலை போலீசார் கைது செய்தனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP