Logo

பாஸ்வேர்டு தெரியாததால் ரூ. 974 கோடி அம்போ!

கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்த நிறுவனத்தின் அதிபர், திடீரென இறந்து போனதால், முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான ரூபாய் முடங்கியுள்ளது.
 | 

பாஸ்வேர்டு தெரியாததால் ரூ. 974 கோடி அம்போ!

கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்த நிறுவனத்தின் அதிபர், திடீரென இறந்து போனதால், முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான ரூபாய் முடங்கியுள்ளது.

கனடா நாட்டை சேர்ந்த கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்யும் குவார்டிகா சி.எக்ஸ்.,நிறுவனத்தின் அதிபர், கெரால்டு கோடேன்,30. இவரது நிறுவனத்தில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த, முதலீட்டாளர்கள், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களின் ஒட்டு முதலீட்டை விடுவிப்பதற்கான பாஸ்வேர்டு, கெரால்டு வசம் மட்டுமே இருந்தது. அதுவும், மிகவும் ரகசியமானதாகவும், எளிதில், அதை யாரும் ஹேக் செய்ய முடியாததாகவும் இருந்தது. 

இந்நிலையில், இந்தியாவில் அனாதை ஆசிரமத்திற்கு நன்கொடை அளிக்க வந்த கெரால்டு, சில நோய் தொற்று காரணமாக திடீரென காலமானார். அவரின் திடீர் மரணத்தால், குவரார்டிகா நிறுவனத்தின் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை முடங்கியது.

குவார்டிகா நிறுவன உயர் அதிகாரிகளும், கெரால்டின் மனைவியும் எவ்வளவோ முயன்றும், அந்த நிறுவனத்தின் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதனால், அதில் முதலீடு செய்த, முதலீட்டாளர்களின், 974 கோடி ரூபாய் முடங்கியுள்ளது. இது குறித்து, அந்த நிறுவனம், கனடா நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP