இந்திய அரசின் செயல் நியாயமானதுதான் - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியிருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றிட உதவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நியாயமானதுதான் என வங்கதேச பிரதமர், ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.
 | 

இந்திய அரசின் செயல் நியாயமானதுதான்  - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியிருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றிட உதவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நியாயமானதுதான் என வங்கதேச பிரதமர், ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசத்திலிருந்து நம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிவதற்கான தேசிய குடிமைப் பட்டியலை, மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதனடிப்படையில், அத்தகையவர்களை வெளியேற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை நியாயமானதுதான் என்று கூறியுள்ளார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா. இது குறித்து அவர் கூறுகையில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் சந்தித்தபோது, இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியிருப்பவர்களை வெளியேற்றிட உதவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு குறித்து நாங்கள் பேசினோம். அதனடிப்படையில், இந்தியாவின் இந்த முடிவு நியாமானதாகதான் எனக்கு தோன்றுகிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் முடிவுகளில் எனக்கு நம்பிக்கை உள்ளது" எனக் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை), சர்வதேச பொருளாதார அமைப்பின், இந்திய பொருளாதார மாநாடு நடைபெற்ற நிலையில், அதன் சிறப்பு விருந்தினராக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பங்குபெற்றதாகவும், அந்நிகழ்வில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து அவர் பேசியதாகவும் செய்திகள் கூறுகின்றன. கடந்த மாதம் செப் 27., அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்து தொண்ட இரு தலைவர்களும், இரு நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் குறித்து கலந்துரையாடி, சில வர்த்தக ரீதியான ஒப்புதல்களில் கையெழுத்திட முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP