அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்!!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரேபியாவின் எண்ணெய் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்க பாதுகாப்பு வளையத்தினால் முறியடிக்க இயலாததை சுட்டக்காட்டி உலகின் மிகப்பெரிய சிறந்த ராணுவம் அமெரிக்காவினுடையதுதான் என ரஷ்யா கிண்டல் செய்துள்ளது.
 | 

அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்!!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரேபியாவின் எண்ணெய் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்க பாதுகாப்பு வளையத்தினால் முறியடிக்க இயலாததை சுட்டக்காட்டி உலகின் மிகப்பெரிய சிறந்த ராணுவம் அமெரிக்காவினுடையதுதான் என ரஷ்யா கிண்டல் செய்துள்ளது.

சௌதி அரேபியா, அமெரிக்க பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வரும் நாடுகளில் ஒன்று.அந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், அந்த நாட்டின் இரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு பெரும் சேதம் விளைந்துள்ளது. அதையடுத்து உலகின் சர்வ வல்லமை வாய்ந்த அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு வளையத்தின் கீழுள்ள அரேபியா நாட்டின் எண்ணெய் கிணறுகளை, அமெரிக்காவினால் பாதுகாக்க இயலவில்லையே, என ரஷ்யா கேலி செய்துள்ளது.

"அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளினால், தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கையாள முடியவில்லை என்பதுதான் உண்மை. எங்களது எஸ்400 ஏவுகனைகளை வாங்கி இருந்தால், இந்த தாக்குதலில் இருந்து அரேபியா தப்பியிருக்க முடியும்" என கேலி செய்யும் விதமாக , ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த திங்கட்கிழமை, சௌதி அரேபியாவின் அங்காராவில், துருக்கி மற்றும் ஈரான் நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசுகையில், "எங்களது எஸ்-400 ஏவுகணைகள் இருந்திருந்தால் சௌதி அரேபியாவிற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அந்நாட்டு தலைவர்கள் நன்றாக யோசித்து சரியான முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது" எனக் கூறினார்.

உலகின் இரு பெரும் ஆயுத ஏற்றுமதியாளர்களான அமெரிக்கா ரஷ்யா இடையான மோதல் 2014 - ல் இருந்தே நடந்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகளை, பிற நாடுகள் வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருவதே, ரஷ்யாவின் தற்போதைய கோபத்திற்குக் காரணமாக கருதப்படுகிறது.

க்ருயிஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களும் நிலத்திற்கு மிக அருகில் சென்று தாக்கும் வல்லமை கொண்டதால், சாதாரண ரேடார் மூலம் இவற்றை கண்டுப்பிடிப்பது மிகவும் கடினமாகும். ஆனால் ரஷ்யாவின் எஸ்400 - ல் மொபைல் ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், க்ருயிஸ் ஏவுகணைகளை எளிதாக கண்டுபிடித்து அவற்றின் தாக்குதலில் இருந்த தன்னைத் தற்காத்துக் கொண்டு இலக்கை நோக்கிச் சென்று தாக்கி அழித்திடும் வல்லமை இந்த ஏவுகணைக்கு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இதனிடையே அமெரிக்க எதிர்ப்பையும் மீறி, ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணைகளை வாங்குவதற்கு ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP