பஞ்சாயத்துக்கு தயார்: டொனால்டு ட்ரம்ப் மீண்டும் குழப்பம்

இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதியை உருவாக்க சமரசம் பேசத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அறிவித்து புதிய குழப்பத்துக்கு வித்திட்டுள்ளார்.
 | 

பஞ்சாயத்துக்கு தயார்: டொனால்டு ட்ரம்ப் மீண்டும் குழப்பம்

இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதியை உருவாக்க  சமரசம் பேசத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அறிவித்து புதிய குழப்பத்துக்கு வித்திட்டுள்ளார். 

ஜம்மு-காஷமீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய துணை ராணுவப்படையினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் பயற்சி முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அந்த இடத்தை அழித்தது.

அந்த நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என அமெரிக் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். அவருடைய உதவி எதுவும் இந்தியாவுக்குத் தேவையில்லை, பாகிஸ்தானை நாங்களே கவனித்துக் கொள்கிறோம் என அயலுறவுத்துறை அதிகாரி மூலம் மத்திய அரசு அறிவித்தது.

அதுமட்டுமின்றி கடந்த ஆகஸ்ட் 26 -ஆம் தேதி பிரான்ஸ்- ல் நடந்த ஐி 7 மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், டொனால்டு ட்ரம்பும் இணைந்து கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியா, பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகளை அவர்களே பேசித் தீர்த்துக்கொள்வார்கள் என டிரம்ப் அறிவித்தார்.

மேலும் பாகிஸ்தான் உடனான பேச்சு வார்த்தையில் மூன்றாவது நாட்டை ஈடுபடுத்த இந்தியாவுக்கு ஆர்வமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி, ட்ரம்பை அருகில் வைத்துக்கொண்டே பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார்.

இந்நிலையில் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தான், இந்தியா இடையே அமைதி திரும்ப உதவிடும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அறிவித்துள்ளார். இதற்கான பதிலடியை இந்திய வெளியுறவுத்துறை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP