ரூ.740 கோடி மோசடி செய்த ரான்பாக்ஸி நிறுவனர் கைது

ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் தலைவரான ஷிவிந்தர் சிங்கை ரூ.740 கோடி மோசடி செய்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

ரூ.740 கோடி மோசடி செய்த ரான்பாக்ஸி நிறுவனர் கைது

ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் தலைவரான ஷிவிந்தர் சிங்கை ரூ.740 கோடி மோசடி செய்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சர்வதேச மருந்து  நிறுவனமான ரான்பாக்ஸி 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகளவில் 150 நாடுகளில் கிளைகளும், 50 வருட முன் அனுபவமும் கொண்ட மிகச்சில நிறுவனங்களில் ஒன்றான ரான்பாக்ஸி, மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங் அகிய இரு சிங் சகோதரர்களின் தலைமையில், பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. அந்நெருக்கடியிலிருந்து தப்பிக்க வழியில்லாமல், இவர்களுக்கு சொந்தமான ரான்பாக்ஸி நிறுவனத்தை, ஜப்பானை சேர்ந்த, மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான டைச்சி சன்ங்யோ நிறுவனத்துக்கு 2008 ஆம் ஆண்டு விற்றனர்.

ஆனால், ரான்பாக்ஸி நிறுவனத்தின் மீது அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகத்தில் பதிவாகியிருந்த வழக்கு குறித்து டைச்சி சன்ங்யோ நிறுவனத்திடம் கூறாமல் விற்றதால், அதையறிந்த டைச்சி சன்ங்யோ நிறுவனம் சிங் சகோதரர்கள் மீது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த டெல்லி உச்ச நீதி மன்றம் டைச்சி சன்ங்யோ நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடன்களை முறையாக செலுத்துமாறு சிங் சகோதரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ரூ 740 கோடி மோசடி செய்ததாக, ரெலிகர் நிறுவனம், சிங் சகோதரர்கள் மீது டெல்லி காவல் நிலையத்தில் பொருளாதார குற்றத்தின் கீழ் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து, இவர்கள் மீது கடந்த மே மாதம் , அமலாக்க இயக்குநரகத்தின்  கீழ், நிதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

இந்நிலையில், இரு சகோதரர்களில் ஒருவரான ஷிவிந்தர் சிங்கை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும், மற்றொரு சகோதரரான  மல்விந்தர் சிங் தேடும் பணியில் ஈடுப்பட்டிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் தலைவரான ஷிவிந்தர் சிங், தனது சகோதரர் மல்விந்தர் சிங் மீது தவறான நிர்வாக வழிமுறையை மேற்கொண்டதாக கூறி வழக்குப்பதிவு செய்திருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP