இந்தியாவுடன் மோத வேண்டாம் - பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்த ராஜ்நாத் சிங்!!

இந்திய எல்லை பகுதியில், கடந்த சில நாட்களாக, பாகிஸ்தானின் அத்துமீறில்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து, கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
 | 

இந்தியாவுடன் மோத வேண்டாம் - பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்த ராஜ்நாத் சிங்!!

இந்திய எல்லை பகுதியில், கடந்த சில நாட்களாக, பாகிஸ்தானின் அத்துமீறில்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து, கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

டெல்லி பிரதேசத்தில், கடற்படை தளபதிகள் மாநாட்டில் உரையாடிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "எப்போதும் அமைதியை விரும்பும் நாடாகவே நம் நாடு திகழ்ந்து வருகிறது. இதுவரை போர் அடிப்படையில் ஒரு நிலத்தை கூட இந்தியா பெற்றதில்லை. எந்த ஓர் பிரச்சனையையும் இந்தியாவாக முதலில் தொடங்கியதில்லை.

எனினும், இத்தகைய இந்தியாவை தொடர்ந்து சீண்டிக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். மும்பை தாக்குதல் போன்ற மற்றொரு தாக்குதல், இனி நமது மண்ணில் ஒரு போதும் ஏற்படாது. அதற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மீண்டும் மீண்டும் நம் மீது தாக்குதல் மேற்கொள்ளும் பாகிஸ்தானிற்கு தக்க பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் இந்திய ராணுவர்கள். 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் மீண்டும் ஒரு முறை பாகிஸ்தானை எச்சரிக்கை நான் விரும்புகிறேன். அமைதியை நாடும் இந்தியாவை தாக்குவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் எங்களது பதிலடியை தொடங்கினால் உங்களால் நிச்சயம் தாங்க முடியாது" என்று கடுமையாக கண்டித்துள்ளார் ராஜ்நாத் சிங்.

மேலும், கடந்த ஞாயிறு அன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான குப்பவாராவில், மீண்டும் அத்துமீறி நுழைய முயற்சித்த பயங்கரவாதிகள் மீது மறுதாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு சொந்தமான மூன்று முகாம்களை தாக்கி அழித்ததோடு, 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்தே தற்போது பாகிஸ்தானை எச்சரித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP