ரஃபேல் போர் விமானத்திற்காக சாஸ்திர பூஜை மேற்கொள்ளவிருக்கும் ராஜ்நாத் சிங்

ரஃபேல் போர் விமானத்திற்காக, பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகருக்கு, அக்டோபர் 7 முதல் 9 வரை, 3 நாட்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கும், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கே "சாஸ்திர பூஜை" எனப்படும் ஆயுதங்களுக்குான பூஜை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
 | 

இன்று (திங்கட்கிழமை), ரஃபேல் போர் விமானத்தின், முதல் 36 விமானங்களை, பிரான்ஸ் அரசிடமிருந்து பெறுவதற்காக, பாரிஸ் நகரம் செல்லவிருக்கிறார், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். நாளை (செவ்வாய்கிழமை) போர்டியாக்ஸ் எனப்படும் துறைமுக நகரத்தில் வைத்து, பிரான்ஸ் அரசு, 36 ரஃபேல் போர் விமானங்களை, இந்தியாவின் கையில் ஒப்படைக்கவிருப்பதை தொடர்ந்து, "சாஸ்திர பூஜை" எனப்படும் ஆயுதங்களுக்குான பூஜையை அவர் மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் மத்திய உள்த்துறை அமைச்சராக இருந்த காலம் தொட்டே, இந்த பூஜையை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஃபேல் போர் விமானங்களை, இந்தியாவிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வில், ராஜ்நாத் சிங்குடன், பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஃப்போலரன்ஸ் பார்லியும் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. மேலும், நாளை விஜயதசமியை தொடர்ந்து, சாஸ்திர பூஜை மேற்கொள்ளபோவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, வரும் அக்டோபர் 9 ஆம் தேதியன்று, ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டின் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின்,  முக்கிய தலைவர்களை சந்திக்கவிருப்பதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 முதல் 8 ஆம் தேதி வரை, உத்திரப்பிரதேச மாநில லக்னோ நகரில் நடைபெறவுள்ள, ஆயுத கண்காட்சிக்கு அழைப்பு விடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்ட் மாதம், பிரான்ஸ் பயணம் மேற்கொண்டிருந்தபோது, இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சி குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் ராணுவத்திற்காகவும் கடற்படைக்காகவும், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் தயாரித்துள்ள ரஃபேல், இரட்டை ஜெட்  போர் விமானம், மிக தொலைவில் இருக்கும் ஆயுதங்களையும் தாக்க வல்லது. 

ரஃபேல் போர் விமானத்திற்காக சாஸ்திர பூஜை மேற்கொள்ளவிருக்கும் ராஜ்நாத் சிங்

தற்போது அதன் முதல் 36 போர் விமானங்களை பெறும் நிலையில், பாதுகாப்பு சோதனைகள் மற்றும் இந்திய தர நிர்ணய கொள்கைகள் படி அனைத்து நடவடிக்கைகளும் முடிந்ததும், 2020ல் இந்த விமானங்கள் நம் விமானப்படையுடன் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP