ரஃபேல் போர் விமான இயந்திர தயாரிப்பாளர் சாஃப்ரான், இந்தியாவிடம் அன்பான வேண்டுகோள்!!

ரஃபேல் போர் விமானத்திற்காக, பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகருக்கு, அக்டோபர் 7 முதல் 9 வரை, 3 நாட்கள் பயணம் மேற்கொண்ட, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஃபேல் போர் விமானத்திற்கான இயந்திரம் தயாரிக்கும் நிறுவனமான சாஃப்ரானின் சிஇஓ வை சந்தித்து இன்று உரையாடினார்.
 | 

ரஃபேல் போர் விமான இயந்திர தயாரிப்பாளர் சாஃப்ரான், இந்தியாவிடம் அன்பான வேண்டுகோள்!!

ரஃபேல் போர் விமானத்திற்காக, பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகருக்கு, அக்டோபர் 7 முதல் 9 வரை, 3 நாட்கள் பயணம் மேற்கொண்ட, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஃபேல் போர் விமானத்திற்கான இயந்திரம் தயாரிக்கும் நிறுவனமான சாஃப்ரானின் சிஇஓ வை சந்தித்து இன்று உரையாடினார்.

ரஃபேல் போர் விமானத்தின், முதல் 36 விமானங்களை, பிரான்ஸ் அரசிடமிருந்து பெறுவதற்காக, பாரிஸ் நகரம் சென்றிருந்தார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செவ்வாய்கிழமை போர்டியாக்ஸ் எனப்படும் துறைமுக நகரத்தில் வைத்து, 36 ரஃபேல் போர் விமானங்களை, பிரான்ஸ் அரசிடமிருந்து பெற்றார். அதன் தொடர்ச்சியாக, இன்று (புதன்கிழமை) ரஃபேல் போர் விமானத்தின் இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனமான சாஃப்ரானின் சிஇஓ வை கண்டு உரையாடினார். 

பிரான்ஸ் பன்னாட்டு நிறுவனமான சாஃப்ரான், ரஃபேல் போர் விமானத்திற்காக தயாரிக்கப்படும், எம்88 என்னும் இயந்திரத்தின் அமைப்புகள் குறித்தும், அதன் வேலைபாடுகள் குறித்தும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எடுத்துரைத்தது. மேலும், இந்தியாவுடன் வர்த்தக ரீதியான உறவை அதிகரிக்கும் ஆர்வம் உள்ளதால், வரிகளை குறைத்து விதிக்குமாறு ராஜ்நாத் சிங்கிடம் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளது அந்நிறுவனம்.

இந்தியாவுடனான வர்த்தக உறவை அதிகரிக்கும் ஆர்வமுள்ள நிறுவனங்களுக்காக தான் இந்தியாவின் "மேக் இன் இந்தியா" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். இதையடுத்து, பிரான்ஸ் நாட்டின் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின்,  முக்கிய தலைவர்களை, அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 முதல் 8 ஆம் தேதி வரை, உத்திரப்பிரதேச மாநில லக்னோ நகரில் நடைபெறவுள்ள, ஆயுத கண்காட்சிக்கு வருமாறு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் ராணுவத்திற்காகவும் கடற்படைக்காகவும், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் தயாரித்துள்ள ரஃபேல், இரட்டை ஜெட்  போர் விமானம், மிக தொலைவில் இருக்கும் ஆயுதங்களையும் தாக்க வல்லது. 

தற்போது அதன் முதல் 36 போர் விமானங்களை பெறும் நிலையில், பாதுகாப்பு சோதனைகள் மற்றும் இந்திய தர நிர்ணய கொள்கைகள் படி அனைத்து நடவடிக்கைகளும் முடிந்ததும், 2020ல் இந்த விமானங்கள் நம் விமானப்படையுடன் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP