Logo

எரியும் நெருப்பில் நெய் வார்த்த புடின்!

இந்தியாவின் பிரதமர் என்ற அந்தஸ்தில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர்புதின் அழைத்திருப்பது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

எரியும் நெருப்பில் நெய் வார்த்த புடின்!

இந்தியாவின் பிரதமர் என்ற அந்தஸ்தில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்  அழைப்பு விடுத்து நம் நாட்டின் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லியில் நேற்று ஆயுத வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். அப்போது அடுத்த ஆண்டு அதாவது 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் இந்தியாவின் பிரதமர் என்ற அந்தஸ்துடன் பங்கேற்க வருமாறு அழைப்பை விடுத்துள்ளார். அவரது அழைப்பின் காரணமாக இந்தியாவில் பற்றியெரியும் வயிற்றோடு காய்ந்து போயிருக்கும் காங்கிரஸ் உட்பட்ட எதிர்க்கட்சிகளின் வயிற்றில் நெய்யை வார்த்து மேலும் அவர்களின் கொதி நிலையை அதிகரிக்க வைத்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

எரியும் நெருப்பில் நெய் வார்த்த புடின்!

தற்போதைய அரசின் பதவிக்காலமும், தற்போது பிரதமராக  உள்ள நரேந்திர மோடியின் பதவிக்காலமும் வரும் மே மாதம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைய உள்ளது.  இந்திய நாடாளுமன்றத் தேர்தல் உத்தேசமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்  நடைபெற்று, அதுதொடர்பான வாக்கு எண்ணிக்கை அந்தக் கால கட்டங்களில் நிறைவடைந்து விடும். மேலும், வெற்றி பெறும் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதிக்குள் அவர் பதவியேற்றிட வேண்டும் என்பது இனி வருங்கால கட்டங்களில் மட்டுமே நடைபெற உள்ள சமாச்சாரம்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் என்ற அந்தஸ்துடன் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள உச்சிமாநாட்டிற்கு ரஷ்யாவிற்கு வருமாறு புடின் அழைப்பு விடுத்தால் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு எரிச்சல் வருமா வராதா? குறிப்பாக பிரதமராக பதவியேற்பது போன்று கனவு தனக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, நரேந்திர மோடிக்கு புடின் விடுத்துள்ள அழைப்பு காதில் தேனாகவா ஒலிக்கும்? 

எரியும் நெருப்பில் நெய் வார்த்த புடின்!

ஏனெனில் நேற்று காலை டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனம் சார்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் தலைமை வகித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலிடம் பார்வையாளர்கள் நேரடியாக கேள்வி கேட்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது, எதிர்வரும் மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், நீங்கள் பிரதமராக பதவியேற்பீர்களா என்று ராகுலைப் பார்த்து பார்வையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதலளித்துப் பேசிய ராகுல், "கூட்டணிக் கட்சிகள் கேட்டுக் கொண்டால் பிரதமராகப் பதவியேற்றுக் கொள்வேன்" என்று பதிலளித்தார்.

இதேபோல காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூடி ராகுலை அக்கட்சியின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு பதிலளித்துப் பேசிய ராகுல், தங்கத் தாம்பாளத்தில் வைத்து அவரிடம் இந்தியபபிரதமர் பதவியை யாரோ அவரிடம் கொடுக்க உள்ளதான நினைப்பில், "பிரதமராக பதவியேற்க தாம் தயாராக உள்ளதாக" அறிவித்தார். ஐயா, தேர்தல்  என்ற ஒன்று இருக்கிறது அதில் பெரும்பான்மையான மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதையும்,  அதன் பிறகு மட்டுமே காங்கிரஸ் வழக்கப்படி உங்களை நீங்களே பிரதமராகத் தெரிவு செய்து கொள்ள முடியும் என்றும்,  ராகுலிடம் எடுத்துச் சொல்ல மாட்டார்களா என்று எண்ணம் நமக்குத் தோன்றியது.

எரியும் நெருப்பில் நெய் வார்த்த புடின்!

ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டமிருக்கு மாடு மேய்க்க என்ற சொலவடை நம் ஊர்ப்பக்கங்களில் பிரபலம். "டோக்லாம் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் நிலையை சீனாவுக்கு விட்டுக் கொடுத்து விட்டார்",  என்று அவருக்கென்றே வெளிநாடு ஒன்றில் "பிரத்யேகமாக" ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார். அதைத் தொடர்ந்து டோக்லாம் பிரச்னையை நீங்கள் பிரதமராக இருந்திருந்தால் எவ்வாறு கையாண்டிருப்பீர்கள் என்று பார்வையாளர்களில் ஒருவர் ராகுலிடம் வினவியபோது அதுகுறித்து "டோக்லாம் குறித்து தற்போது தான் விரிவாக அறிந்திராத காரணத்தால், ஒரு பிரதமராக அந்தப் பிரச்னையை தான் எவ்வாறு கையாண்டிருப்பேன் என்பதைக் கூற இயலாது என்று கூறி, வெளிநாட்டுப் பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தார். 

இங்கு நாம் நினைவுகொள்ள வேண்டியது, ராகுல் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மட்டுமல்ல, இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். அப்படிப்பட்ட பொறுப்புமிக்க பதவிகளை பெற்றுள்ள ஒருவர் கூறிய பதிலால் இந்தியாவின் மானம் அயல்நாட்டில் கப்பலேறியது. இதுவே ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த தலைவர் ஒருவர், ராகுல் போன்று அரசியலில் உயரிய நிலையில் இருந்துகொண்டு, பார்வையாளர்களிடம் அவரைப் போன்று பொறுப்பற்று பதிலளித்திருந்தால், அந்தத் தலைவரை அந்த நாட்டு பத்திரிக்கைகளும், ஊடகங்களும் கிழித்துத் தொங்க விட்டிருக்கும் என்பது மிகையான கருத்து கிடையாது. ஆனால் இந்தியச் செய்தி நிறுவனங்கள் ராகுலின் கேலிக்கூத்தான பதிலை செல்லமாகத் தட்டிக் கேட்கக்கூடத் தயாரில்லை. ராகுலின் உளறல் குறித்து செய்தி வெளியிடக்கூட இல்லை என்பது அவர்களின் நடுநிலைப் பண்புக்கு அத்தாட்சியாகும்.

எரியும் நெருப்பில் நெய் வார்த்த புடின்!

இதில் ராகுலை தலைவராக கருதும் நாம் வெட்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், டோக்லாம் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவில் காங்கிரஸ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான  ராகுலும் ஒரு உறுப்பினராக பதவியில் உள்ளார். இந்தத் தகவலை பின்புலமாகக் கொண்டு தேச முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ராகுலின் அக்கறையை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும்.

இந்நிலையில் நாம் ஏற்கெனவே கூறிய பழமொழி உங்களுக்கு தற்போது நினைவில் வந்திருக்கும் என நினைக்கிறேன். அதாவது ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டமிருக்கு மாடு மேய்க்க. இந்திய ஜனநாயகத்தை பெருமையடைச் செய்யக்கூடிய தலைவராக ராகுல் செயல்பட்டு வருவதை நாம் எவரும் மறுக்கவே மாட்டோம் அல்லவா? ராகுலுக்கு அப்பாற்பட்டு நாம் மோடியை புடின் அழைத்திருப்பது குறித்து சிந்திக்க வேண்டிய விஷயம், நரேந்திர மோடியை பிரதானமாக வைத்து தங்கள் நாட்டின் எதிர்கால கொள்கை முடிவுகளை எடுப்பதில் ரஷ்யாவுக்கு எந்தத் தயக்கமுமில்லை என்பதை புடின் வெளிப்படையாகக் நம் நாட்டு மக்களுக்கு கூட அவரது அழைப்பின் மூலம் நேரடிச் செய்தியாகக் கூறியுள்ளார்.

எரியும் நெருப்பில் நெய் வார்த்த புடின்!

அதுமட்டுமின்றி, "அறிவாளிகளான இந்திய எதிர்கட்சித் தலைவர்களே உங்கள் நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கு பலரும் போட்டி போட்டு வருகிறீர்கள், வெற்றியடைவோமா தோல்வி பெறுவோமோ என்பதே அறிய முடியாத நிலையில் கனவுகளைத் துரத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் கனவுகளைத் துரத்தாமல் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கும் உங்களின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே அடுத்த பிரதமராகவும் உங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்" என்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நம் நாட்டில் உள்ள ராகுல் உட்பட்ட எதிர்கட்சிகளின் தலைவர்களுக்கு நேரடியான செய்தியாகக் கூறியுள்ளார் அவரது அழைப்பின் மூலம்.

 இதுதான் சப்தமே இல்லாமல் எரியும் நெருப்பில் நெய்யை வார்த்து  தொடர்ந்து பற்றி எரியச் செய்வது இல்லையா நண்பர்களே! 

  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP