இன்டர்நெட்டில் பிரபலமாகும் நாய்குட்டி ஐஸ் கிரீம்

தைவானில் அசல் நாய்க்குட்டி போன்றே வடிவமைக்கப்பட்ட ஐஸ் கிரீம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஐஸ் க்ரீம் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 | 

இன்டர்நெட்டில் பிரபலமாகும் நாய்குட்டி ஐஸ் கிரீம்

தைவானில் அசல் நாய்க்குட்டி போன்றே வடிவமைக்கப்பட்ட ஐஸ் கிரீம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஐஸ் க்ரீம் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தைவானின் கவுசியங் நகரில் உள்ள ஜே.சி.கே ஆர்ட் கிட்சன் என்ற உணவகத்தில், நாய்க்குட்டிகளைப் போன்ற உருவம் கொண்ட ஐஸ் கிரீம்கள் வழங்கப்படுகின்றன. அசல் நாய்க்குட்டியின் கை, கால், கண், தோல் மட்டுமின்றி அதில் உள்ள முக சுருக்கங்கள் முதற்கொண்டு அப்படியே வடிவமைக்கப்படுகிறது. நாய்க்குட்டியின் வடிவிலான அச்சில் தேவையான ஃபிளேவரில் உள்ள ஐஸ் கிரீமை நிரப்புகின்றனர். இந்த ஐஸ் க்ரீம் மைனஸ் 30 டிகிரியில் உறையவைக்கப்பட்டு, அந்த அச்சில் இருந்து எடுக்கப்படும் நாய்க்குட்டிக்கு, வாடிக்கையாளரின் விருப்பப்பட்ட நிறத்தை அதன் கருவிழியாக பூசுகின்றனர். இந்த ஐஸ் க்ரீம் செய்வதற்கு ஐந்து மணி நேரம் தேவைப்படுவது குறிப்பிடதக்கது.

அதன்பின் குட்டி நாய் ஒன்று தட்டில் கை, கால்களை சற்று வெளியே நீட்டி அசலாகப் படுத்திருப்பது போல அசத்தல் தோற்றத்தில் ஐஸ் கிரீம் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இதனை குழந்தைகள் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் வாங்கி ருசிக்கின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP