Logo

ஜெர்மனி அதிபரின் இந்திய பயணம் : பிரதமர் மோடியை சந்தித்த ஏஞ்சலா மெர்க்கெல்!!

இந்திய வந்திறங்கியுள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாடுகளின் வளர்ச்சி குறித்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 | 

நேற்று (வியாழன்), இந்தியாவின் தலைநகரமான டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜெர்மனி அதிபர்  ஏஞ்சலா மெர்க்கெலை, பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி ஜித்தேந்திர சிங் வரவேற்றார். இதை தொடர்ந்து, இன்று காலை ராஷ்டிரபதி பவன் வந்தடைந்த ஜெர்மனி அதிபர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடினார். 

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், இரு நாடுகளின் வளர்ச்சி குறித்த விரிவான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய பயணம் குறித்து கூறிய ஜெர்மனி அதிபர், பல வேற்றுமைகள் உள்ள போதும், ஒற்றுமையாக திகழும் ஒரு மிகபெரும் ஜனநாயக நாடான இந்தியா வந்துள்ளதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இருநாடுகளின் வளர்ச்சி குறித்து மோடியுடனான கலந்துரையாடலுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தியா ஜெர்மனி ஆகிய இருநாட்டின் தலைவர்களும், வேலை வாய்ப்பு, பாதுகாப்பு, பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம் என்பது போன்ற 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்தியவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP