Logo

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜிங்பிங் சந்திப்பின் பிரதான 10 அம்சங்கள் அறிவோமா!

மோடி -ஜிங்பிங் சந்திப்பின் பிரதான 10 அம்சங்கள்
 | 

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜிங்பிங் சந்திப்பின் பிரதான 10 அம்சங்கள் அறிவோமா!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜீ ஜின்பிங், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்தார். இதை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இருவரும் மாமல்லபுரம் சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர். அங்குள்ள கோவில்களையும், சிற்பங்களையும், இந்திய கலாச்சாரத்தை உணர்த்தும் விதமான கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார் சீன அதிபர் ஜின்பிங்.

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜிங்பிங் சந்திப்பின் பிரதான 10 அம்சங்கள் அறிவோமா!

இந்திய பயணத்தின் 2 வது நாளான இன்று, கோவளம் ஹோட்டலில் பிரதமர் மோடி மற்றும் ஜின்பிங், சுமார் 1 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாட்டு வளர்ச்சி குறித்து மட்டுமில்லாமல், சர்வதேச பிரச்சனைகளான பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், பிரிவினைவாதம், வறுமை ஒழிப்பு ஆகியவை குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

இதை தொடர்ந்து, தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஹோட்டலில் அமைக்கப்பட்டிருந்த தமிழக கலைப்பொருட்கள் மற்றும் கைத்தறி கண்காட்சியினை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். மதிய விருந்து அளித்து சீன அதிபரை பிரதமர் மோடி வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தார். சென்னை விமானநிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் நேபாளம் நாட்டிற்கு புறப்பட்டார் சீன அதிபர். 

இரு தலைவர்களின் இந்த சந்திப்பின் பிரதான அம்சங்கள் இதோ : 

1. இந்தியா மற்றும் சீனாவின் வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்தும் வகையில், இருநாட்டின் வர்த்தக பிரதிநிதிகளாக, இந்தியாவின் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனும், சீனாவின் துணை அதிபரான ஹூ சுன்ஹூவாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2. ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சே இரு தலைவர்களின் உரையாடலின் போது எழவில்லை என்றும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தான் காஷ்மீர் பிரச்சனை என்பதில் சீனாவும் தெளிவாக உள்ளது என்பதை இதிலிருந்து உணர முடிந்ததாகவும் வெளியுறவுத்துறை செயலர்  விஜய் கோகலே கூறியுள்ளார்.

3. இந்தியா சீனா ஆகிய இருநாடுகளுமே, கலாச்சாரம் பண்பாடு மட்டுமின்றி பல்வேறு வழிகளில் வேறுபட்டு உள்ளன. இதே போல, இரு தலைவர்களின் கருத்துக்களிலும் பல வேறுபாடுகள் இருந்து வரும் நிலையிலும், அவ்வேறுபாடுகளை விவேகத்துடன் கையாளுவதென்றும், வேறுபாடுகள் பிரச்னைகளாக மாறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இணைந்து முடிவெடுத்துள்ளனர்.

4. வுஹான் மாநாட்டின் மூலம், இருநாடுகளின் வர்த்தக ரீதியான உறவு மேம்பட்டிருப்பதை தொடர்ந்து, தற்போதைய "சென்னை கனெக்ட்" சந்திப்பின் மூலம், இந்தியா சீனாவின் உறவு, வர்த்தக உறவையும் தாண்டி நட்புறவாக  மாறியுள்ளதாக இருநாட்டு தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

5. இந்திய பயணத்தின் முதல் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை), சுமார் ஐந்து மணிநேரம், மோடியும் ஜின்பிங்கும் ஒன்றாக கழித்ததால், இருவரின் இடையே இருந்து வந்த நட்பு இன்னும் வலுவாகியிருப்பதாகவும், மேலும், உலக பிரச்சனை குறித்து மட்டுமில்லாமல், பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து மனம் விட்டு பேசியதாகவும் சீன அதிபர் ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜிங்பிங் சந்திப்பின் பிரதான 10 அம்சங்கள் அறிவோமா!

6. பல்லவ மன்னர்களின் ஆட்சி காலமான இரண்டாம் நூற்றாண்டில், இந்திய-சீன மக்களிடையே நிலவி வந்த நட்பு நிறைந்த வர்த்தக உறவை, இந்நூற்றாண்டிலிருந்து மீண்டும் புதுப்பிக்க விழைந்து, அதற்கான சில தீர்மானங்கள் குறித்தும் இருதலைவர்களும் உரையாடினர். இந்தியா-சீனா இடையே வர்த்தக ரீதியான உறவு மட்டுமில்லாது, இவ்விரு நாட்டு மக்களிடையே நட்புறவை மேம்படுத்தவும் எண்ணியே இம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

7. இந்தியாவின் அழைப்பை ஏற்று, இந்தியா வந்த சீன அதிபருக்கு, இந்தியாவின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில் அமைய பெற்றிருக்கும், நாச்சியார்கோவில் விளக்கையும், தஞ்சாவூர் ஓவியத்தையும் பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி.

8. இதை தொடர்ந்து, அவரது பயணத்தின் இறுதி நாளான இன்று (சனிக்கிழமை), இந்திய கலைநயத்தை பரைசாற்றும் விதமாகவும், இந்தியர்களின் பழம்பெரும் தொழிலான நெசவு தொழிலை நினைவுகூறும் விதமாகவும், கைத்தறியில் நெய்யப்பட்ட , சீன அதிபரின் முகம் பொருந்திய மல்பெரி பட்டுத்துணியை பரிசாக அளித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜிங்பிங் சந்திப்பின் பிரதான 10 அம்சங்கள் அறிவோமா!

9. இந்தியாவுக்கு வருகை புரிந்த சீன அதிபர், இதே போன்ற ஒரு சந்திப்பை, பிரதமர் மோடியுடன் சீனாவில் மேற்கொள்ள விரும்புவதாகவும், அதற்காக நிச்சயம் இந்திய பிரதமர் சீனா வரவேண்டும் என்றும் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார் சீன அதிபர் ஜின்பிங்.

10. பிரதமர் மோடியின் சீன பயணம் நிச்சயிக்கப்பட்ட நிலையிலும், அதற்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என வெளியுறவுத்துறை செயலர்  விஜய் கோகலே கூறியுள்ளார்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP