அமெரிக்காவில் பல தரப்பு மக்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி

அமெரிக்க இந்திய வம்சாவழியினர் நடத்தும், "ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நேற்றிரவு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
 | 

அமெரிக்காவில் பல தரப்பு மக்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி

எப்படி இருக்கிறீர்கள் மோடி, நாம் பகிர்ந்துகொண்ட கனவுகள், நம் பிரகாசமான எதிர்காலம்"  என்று பெயரிடப்பட்டுள்ள, அமெரிக்க இந்திய வம்சாவழியினர் நடத்தும்,  "ஹொடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நேற்றிரவு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு பலதரப்பு மக்களை சந்தித்து பேசினார்.

09:51AM
22 செப் 2019
ட்ரம்ப், மோடியின் உதவியை நாடிய பலூச், சிந்தி மற்றும் பாஷ்தோ இன மக்கள் 
"ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ட்ரம்ப் மற்றும் மோடி இருவரையும் கண்டு, பாகிஸ்தானில் தங்கள் இனத்திற்கு எதிராக நடந்துக் கொண்டிருக்கும் மனித உரிமை அத்துமீறல் மற்றும் தாக்குதல்களிலிருந்து தங்கள் இன மக்களை விடுவிக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.
 

09:09 AM
22 செப் 2019
அமெரிக்காவில் மோடி: அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்கள் சந்திப்பு
"ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்த பிரதமரை, அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்கள் மகிழ்வுடன் வரவேற்றனர். 
இந்நிகழ்ச்சியில் அவரை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்ற இந்தியாவின் இந்த முடிவிற்கு அவர்கள் முழு மனதுடன் ஆதரவு அளிப்பதாகவும் கூறினர்.

 

மேலும், இந்தியாவுடன் இணைந்திருக்கும் காஷ்மீரின் வளர்ச்சியில் பங்கு கொள்ள விரும்புவதாக கூறி, காஷ்மீர் பண்டிட்களுக்கான ஒரு குழு அமைக்குமாறு இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோடியுடன் உரையாடிய அவர்கள், "காஷ்மீரின் வளர்ச்சியில் பங்கு கொள்ளவும், இந்திய அரசுடன் இணைந்து செயல்படவும் நாங்கள் தயாராக உள்ளோம்" எனக் கூறினர்.

08:59 AM
22 செப் 2019
அமெரிக்காவில் மோடி போஹ்ரா இன மக்கள் சந்திப்பு
"ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்த பிரதமரை, தாவூதி போஹ்ரா இன மக்கள் கோலாகலமாக வரவேற்றனர்
கடந்த வருடம் இன்டோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடியை சந்தித்த நிகழ்வுகளை கூறி, இந்த வருடம் அவரை மீண்டும் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்கள் கூறினர். 
 

 


08:53 AM
22 செப் 2019
அமெரிக்காவில் மோடி. சீக்கியர்கள் சந்திப்பு
"ஹொடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்த பிரதமரை, அமெரிக்காவின் சீக்கிய இன மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

 

மோடிக்கு கோரிக்கை விடுத்த சீக்கிய மக்கள்
மோடியுடன் உரையாடிய அவர்கள், கர்தார்பூர் விவகாரத்தில் தீர்மானமான முடிவு எடுத்ததற்காக நன்றி கூறியதுடன், சீக்கியர்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளைக் கூறி அதற்கு தீர்வு காண முயற்சிகள் எடுக்குமாறும் அன்புடன் வேண்டுகோள் விடுத்தனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP