Logo

இந்திய நலனில் அக்கறை கொண்டு ஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடி!!!

மூன்று நாள் சுற்று பயணமாக தாய்லாந்து சென்றிருந்த பிரதமர் மோடி, இந்தியாவின் நலன் கருதி, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
 | 

இந்திய நலனில் அக்கறை கொண்டு ஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடி!!!

மூன்று நாள் சுற்று பயணமாக தாய்லாந்து சென்றிருந்த பிரதமர் மோடி, இந்தியாவின் நலன் கருதி, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்து இருக்கிறார். 

தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் நடைபெற்ற பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காந்தியின் வழிகாட்டலோ அல்லது தன்னுடைய மனசாட்சியோ, ஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனுமதியளிக்க மறுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆசியான் கூட்டமைப்பின் பத்து நாடுகளும், எப்.டி.ஏ உறுப்பினர்களான 6 நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் இல்லை என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. 

ஏற்கனவே, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான பொருட்களால், இந்திய உற்பத்தியாளர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாக கூறிய பிரதமர், முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வரும், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்துறையினர்கள் என அனைத்து தரப்பினரின் நலன் கருதியே எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரும் உதவியாக இருந்து வரும் பல தரப்பினருக்கும் ஆதரவாக இல்லாத இந்த ஒப்பந்தம் தனது நோக்கங்களுக்கு எதிர்மறையாக உள்ளதாகவும், காந்தியின் வழிகாட்டுதலோ, தனது மனசாட்சியோ, இந்தியாவின் நலனிற்கு உதவாத வகையில் அமைய பெற்றிருக்கும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP