பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கி அதிபருக்கு செக் வைத்த பிரதமர் மோடி

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கி அதிபருக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்பதை உணர்த்தும் ரீதியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 | 

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கி அதிபருக்கு செக் வைத்த பிரதமர் மோடி

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கி அதிபருக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்பதை உணர்த்தும் ரீதியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் நியூயார்க் பயணம் மேற் கொண்ட பிரதமர் மோடி, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கு, அர்மேனியா மற்றும் சைப்ரஸ் நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

74வது ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாடு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில், தங்கள் கருத்துக்களையும், பிரச்சனைகளையும், உலக பார்வைக்கு கொண்டு வரும் பொருட்டு, அனைத்து ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வர். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டதை தொடர்ந்து, இந்தியாவை பல வகையில் தாக்கி வந்த பாகிஸ்தான், அமெரிக்க அதிபர் ட்ரம்பிடமும் காஷ்மீருக்கு நீதி வேண்டும் எனவும், இந்தியாவிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தது. 

அதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், காஷ்மீர் பிரச்னையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாகவும், இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுமே தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும் போது, இந்தியாவும் தான் மத்தியஸ்தம் செய்ய சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி, நரேந்திர மோடியுடன் நேரடியாக இந்த விஷயத்தைப் பேசி தீர்த்துக்கொள்வதே, சிறப்பாக இருக்குமென்று கருதுவதாக கூறிவிட்டார்.

இதனால் வருத்தமடைந்த பாகிஸ்தான் பிரதமர், காஷ்மீர் மக்களின் நிலை அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ நடந்தால் இப்படிதான் வேடிக்கை பார்க்குமா இந்த நாடுகள் என்ற கேள்வியை எழுப்பியதோடு, சர்வதேச நாடுகளின் அலட்சிய போக்கு மிகுந்த வருத்ததை அளிப்பாதகவும் கூறினார்.

இதனிடையில், காஷிமீர் பிரச்சனை உள்நாட்டு விவகாரம் என இந்தியா உலக நாடுகளிடம் பல முறை எடுத்துரைத்தும், ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் ரீதியில் இருந்ததால், அவருக்கு அதை உணர்த்தும் வகையில், பிரதமர் மோடி, துருக்கியுடனான நட்புறவு குறைந்து காணப்படும் நாடுகளான அர்மேனியா மற்றும் சைப்ரஸ் நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் மூலம், காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்ற ஆணித்தரமான எச்சரிக்கையை அவர் துருக்கி தலைவருக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் விடுத்துள்ளார்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP