பிரதமர் மோடியின் தாய்லாந்து பயணம்!!

அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய கூட்டமைப்பு குழு சந்திப்பில் எடுக்கப்படும் தீர்மானங்களை செயல்படுத்தும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார்.
 | 

பிரதமர் மோடியின் தாய்லாந்து பயணம்!!

அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய கூட்டமைப்பு குழு சந்திப்பில் எடுக்கப்படும் தீர்மானங்களை செயல்படுத்தும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார். 

3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று தாய்லாந்து பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அது குறித்த பாங்காக் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு, பிராந்திய விரிவான கூட்டமைப்பில் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்பதுடன், அதை செயல்படுத்துவதற்கான வேலைகளில் இந்தியா முழு மூச்சுடன் ஈடுபடும் என்று உறுதியளித்துள்ளார். 

பிராந்திய கூட்டமைப்பு குழு சந்திப்பில் விவாதிக்கப்படும் விவாதங்கள் சர்வதேச விவாதமாக இருக்கும் பட்சத்தில், அதற்காக கலந்தாலோசிக்கப்படும் தீர்மானங்களும் அனைத்து நாடுகளுக்கும் உதவிடும் வகையில் அமையபெறும் என்று கூறிய அவர், இந்தியாவில் சமீபகாலமாக நீடித்து வரும் வர்த்தக பற்றாக்குறைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் இந்த கலந்துரையாடல் இருக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார். 

3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாட்டை தொடர்ந்து, தாய்லாந்தில் நடைபெறவுள்ள 16வது ஆசியான் கூட்டமைப்பு மாநாடு, 14வது கிழக்காசிய மாநாடு, ஆகியவற்றிலும் கலந்து கொள்ள உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதை தொடர்ந்து, பாங்காக்கில் நடைபெறும் ‘சவாஸ்டீ பிரதமர் மோடி’ என்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் இருந்த குடிபெயர்ந்த மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP