பிரதமர் மோடி, ரே தலியோ சந்திப்பு!!

சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்தித்த பிரிஜ்வாட்டர் அசோசியேட்ஸின் தலைவர் ரே தலியோ, அவர் ஓர் மிகச் சிறந்த மனிதர் என்றும், அவருடனான உரையாடல் தனக்கு பல விஷயங்களை கற்று தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
 | 

பிரதமர் மோடி, ரே தலியோ சந்திப்பு!!

சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்தித்த பிரிஜ்வாட்டர் அசோசியேட்ஸின் தலைவர் ரே தலியோ, அவர் ஓர் மிகச் சிறந்த மனிதர் என்றும், அவருடனான உரையாடல் தனக்கு பல விஷயங்களை கற்று தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் தியான முறை எவ்வாறு உலகை பற்றிய புரிதலுக்கு வழிவகுக்கிறது என்ற தலியோவின் கேள்விக்கு, பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு தேவைப்படும் முக்கியமான அம்சங்கள் நிலையான மனப்பான்மை மற்றும் தெளிவான சிந்தனை என்று குறிப்பிட்ட பிரதமர், அதை அவர் மேற்கொள்ளும் தியான முறை அவருக்கு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

இதை தொடர்ந்து, தற்போதைய உலகம் பலவகையான மாற்றங்களை சந்தித்து வருவதாகவும், வளர்ந்து வரும் நாடுகள் பலவும் மிகபெரும் வளர்ச்சியை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், வளர்ச்சிகள் எவ்வளவு வேகமாக நடைபெறுகிறதோ அதே அளவில் மனித நேயமும் வளர வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்துள்ள, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் மனித நேயத்தையும் வளர்ப்பது சற்று கடினமான காரியம் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையில், இப்போதைய கால கட்டத்தில், உலகை ஒன்று திரட்டுவதற்கு எது உதவும் என்று நினைக்கிறீர்கள் என்ற ரே தலியோவின் கேள்விக்கு, தற்போதைய உலகம் போர் என்கிற பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த பாதையை மாற்றி நேர் வழியில் நம் பார்வையை செலுத்துவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணையும் ஓர் நிலையானஅமைப்பு வேண்டும். அப்படிபட்ட ஓர் முக்கிய அமைப்பாக திகழும் ஜக்கிய நாடுகளின் வடிவத்தை மாற்றி அமைப்பது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் பதில்களை மிக உன்னிப்பாக உள்வாங்கிய பிரிஜ்வாட்டர்ஸ் அசோசியேட்ஸின் தலைவர், இந்தியா என்ற நாட்டை ஒன்று திரட்டிய பெருமை மோடியே சாரும் என்றும், இந்தியாவிற்காக அவர் மேற்கொண்டிருக்கும் திட்டங்கள் அணைத்தும் மிகபெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP