அமெரிக்காவில் பிரதமர் மோடி - இன்றைய நிகழ்வுகள்

ஹௌடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நேற்றிரவு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி
 | 

அமெரிக்காவில் பிரதமர் மோடி - இன்றைய நிகழ்வுகள்

எப்படி இருக்கிறீர்கள் மோடி, நாம் பகிர்ந்துகொண்ட கனவுகள், நம் பிரகாசமான எதிர்காலம்"  என்று பெயரிடப்பட்டுள்ள, அமெரிக்க இந்திய வம்சாவழியினர் நடத்தும்,  "ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நேற்றிரவு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய நிகழ்வுகள் :

17:37
22 செப் 2019
"ஹௌடி மோடி" நிகழ்விற்கு ஹூஸ்டன் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணம் என்ன?
இந்த ஆண்டின் பிரவாசி பாரதிய திவாஸிற்கான விருது பெற்ற, கிதேஷ் தேசாய் கூறுகையில், "அமெரிக்காவின் ஆற்றல் நகரமாக ஹூஸ்டன் கருதப்படுகிறது. மேலும், மருத்துவம், விண்வெளி என அனைத்திலும் முன்னிலை வகுப்பதால் தான், இந்நிகழ்விற்கு ஹூஸ்டன் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது" எனக் கூறினார்.
 

17:00
22 செப் 2019
ஹௌடி மோடி நிகழ்விற்காக குவியும் மக்கள்
ஹூஸ்டன் நகரின், என்,ஆர்.ஜி அரங்கத்தில்,ஹௌடி மோடி நிகழ்விற்காக மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். 
மோடியை காண மிக ஆர்வமாக இருப்பதாகவும், அவர் என்ன பேசப் போகிறார் என்பதை அரிய ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

 

 


16:43
22 செப் 2019
ஹௌடி மோடி நிகழ்ச்சி அட்டவணை
1. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவரும், வர்த்தகம், விவசாயம், எரிபொருள், இராணுவம், விண்வெளி போன்ற மிக முக்கிய நிகழ்வுகள் குறித்து கலந்துரையாட உள்ளனர்.
2. "ஹௌடி மோடி"  நிகழ்ச்சி, ஹூஸ்டன் நகரின் என்.ஆர்.ஜி அரங்கத்தில், இரவு 20:30 ஐஎஸ்டி நேரப்படி தொடங்கவிருக்கிறது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 30 நிமிடங்கள் உரையாடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
3. அமெரிக்க காங்கிரஸ் தலைவர்களுடனான கலந்துரையாடலும் நடைபெறவிருக்கிறது. 
 

15:45
22 செப் 2019
மோடியுடான கலந்துரையாடல் மகிழ்ச்சியளிக்கிறது - கென் ஜஸ்டர்
"இந்திய பிரதமர் நரேந்திர மோடியடனான கலந்துரையாடல் மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்க இந்திய எரிபொருள் வர்த்தக உறவை மேம்படுத்த செய்ய வேண்டிய செயல்கள் குறித்தே எங்களது உரையாடல் இருந்தது"  என அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

14:35
22 செப் 2019
அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்களுடன் மோடி கலந்துரையாடல்
பிரதமர் மோடி, காஷ்மீர் பண்டிட்கள் 17 பேர் கொண்ட குழுவுடன், காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து விரிவாக உரையாடினார். இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து மிகச் சிறந்த காஷ்மீரை உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்தார்.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, மத்திய அரசு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க உத்தரவிட்டது.
அவர்களுடனான உரையாடலுக்கு பின்னர், "காஷ்மீர் பண்டிட்களுடனான சிறப்பு உரையாடல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

 

 


13:32
22 செப் 2019
பாக் தரம் தாழ்ந்து செயல்படுகிறது: நாம் உயரப் பறந்து கொண்டிருக்கிறோம்: சையது அக்பரூதீன்
வரும் செப் 27., ஆம் தேதி நடக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தைக் குறித்து பேச உள்ளதாக வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியதையடுத்து, இந்தியாவின் நிரந்தர தூதரான  சையது அக்பரூதீன் அதற்கு பதில் தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் தரம் தாழ்ந்து செயல்படுகிறது; அதன் இந்த செயல்பாடு இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது. நாம் உயரப் பறந்துகொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

12:33 
22 செப் 2019
30 நிமிடம் உரையாற்றவிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் "ஹௌடி மோடி" நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 30 நிமிடங்கள் உரையாற்றவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
மேலும், பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்து இந்திய பிரதமரின் உரையாடலை இவர் கேட்க போவதாகவும் கூறப்படுகிறது.,
இதன் மூலம், இந்தியாவிற்கு அவர் அளிக்கும் முக்கியத்துவமும், மோடியின் மீதுள்ள அன்பையும் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
 

11:42 
22 செப் 2019
அமெரிக்க எரிபொருள் நிறுவன தலைவர்களுடன் மோடி சந்திப்பு
அமெரிக்காவின் எரிபொருள் நிறுவன தலைவர்களை சந்தித்த பிரதமர், இரு நாடுகளின் எரிபொருள் வர்த்தக உறவை மேம்படுத்தவும், இந்தியாவின் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்யவும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை குறித்து கலந்தாலோசித்தார். 
"எரிபொருள் தலைநகரமான ஹூஸ்டனில் வைத்து அதை குறித்து பேசாமல் இருக்க முடியாது. வர்த்தக ரீதியான பல விஷயங்களை குறித்து எங்கள் உரையாடல் இருந்தது"  என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

10:56 
22 செப் 2019
மோடிக்கு சீக்கிய இன மக்கள் நன்றி
மோடியுடன் உரையாடிய அவர்கள், கர்தார்பூர் விவகாரத்தில் தீர்மானமான முடிவு எடுத்ததற்காக நன்றி கூறியதுடன், சீக்கியர்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளைக் கூறி அதற்கு தீர்வு காண முயற்சிகள் எடுக்குமாறும் அன்புடன் வேண்டுகோள் விடுத்தனர்.
"மோடி ஜி யை இரும்ப மனிதராக தான் நாங்கள் பார்க்கிறோம். இந்தியாவுக்கு எப்போதும் ஆதரவு அளிப்பதைப் போல மோடி ஜி விற்கும் எங்களது ஆதரவு எப்போதும் இருக்கும்" என அவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 

10:18 
22 செப் 2019
இந்தியாவுக்கு ஆதரவாக ட்ரம்ப் - ஷலாப் குமார்
"ஹௌடி மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப் கலந்து கொள்ளவிருப்பதன் மூலம், இந்தியாவுக்கு தான் அவரின் ஆதரவு என்பது புரிகிறது. இது பாகிஸ்தான் பிரதமருக்கு அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும்" என ரிபப்ளிக்கன் இந்து அமைப்பைச் சேர்ந்த ஷலாப் குமார் கூறினார். 
 

10:06 
22 செப் 2019

இந்திய அமெரிக்க உறவை மெருகேற்றுகிறார் மோடி - டானியல் எர்கின்

அமெரிக்க எரிபொருள் நிறுவனமான, ஐஎச்எஸ் மார்க்கிட் இன் தலைவர் டானியல் எர்கின் கூறுகையில், "மோடியின் இந்த வருகை இருநாடுகளின் எரிபொருள் வர்த்தகத்தை அதிகரிக்கவும், இந்திய அமெரிக்க உறவை மேலும் பலப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது" எனக் கூறினார். 

 

 

10:01 
22 செப் 2019

அமெரிக்காவிலும் "ஸ்வச் பாரத்" - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி

அவரை வரவேற்கும் பொருட்டு, அவர்கள் அளித்த பூங்கொத்திலிருந்த கீழே விழுந்த ஒரு பூவை பிரதமர் தாமாகவே கீழிருந்து எடுத்து தனது பாதுகாவலரிடம் கொடுத்தார். அவரின் இந்த செயல் சுற்றியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதன் மூலம், அமெரிக்காவிலும் "ஸ்வச் பாரத்" -ஐ கடைபிடிக்கிறார் மோடி என சமூக வளைத்தளங்களில் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

09:51
22 செப் 2019

ட்ரம்ப், மோடியின் உதவியை நாடிய பலூச், சிந்தி மற்றும் பாஷ்தோ இன மக்கள் 

"ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ட்ரம்ப் மற்றும் மோடி இருவரையும் கண்டு, பாகிஸ்தானில் தங்கள் இனத்திற்கு எதிராக நடந்துக் கொண்டிருக்கும் மனித உரிமை அத்துமீறல் மற்றும் தாக்குதல்களிலிருந்து தங்கள் இன மக்களை விடுவிக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.

09:09 
22 செப் 2019

அமெரிக்காவில் மோடி: அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்கள் சந்திப்பு

"ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்த பிரதமரை, அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்கள் மகிழ்வுடன் வரவேற்றனர். 

இந்நிகழ்ச்சியில் அவரை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்ற இந்தியாவின் இந்த முடிவிற்கு அவர்கள் முழு மனதுடன் ஆதரவு அளிப்பதாகவும் கூறினர்.

மேலும், இந்தியாவுடன் இணைந்திருக்கும் காஷ்மீரின் வளர்ச்சியில் பங்கு கொள்ள விரும்புவதாக கூறி, காஷ்மீர் பண்டிட்களுக்கான ஒரு குழு அமைக்குமாறு இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோடியுடன் உரையாடிய அவர்கள், "காஷ்மீரின் வளர்ச்சியில் பங்கு கொள்ளவும், இந்திய அரசுடன் இணைந்து செயல்படவும் நாங்கள் தயாராக உள்ளோம்" எனக் கூறினர்.

 

 

08:59 
22 செப் 2019

அமெரிக்காவில் மோடி போஹ்ரா இன மக்கள் சந்திப்பு

"ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்த பிரதமரை, தாவூதி போஹ்ரா இன மக்கள் கோலாகலமாக வரவேற்றனர்
கடந்த வருடம் இன்டோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடியை சந்தித்த நிகழ்வுகளை கூறி, இந்த வருடம் அவரை மீண்டும் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்கள் கூறினர். 

 

 

08:53 
22 செப் 2019

அமெரிக்காவில் மோடி. சீக்கியர்கள் சந்திப்பு

"ஹொடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்த பிரதமரை, அமெரிக்காவின் சீக்கிய இன மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

 

 

மோடிக்கு கோரிக்கை விடுத்த சீக்கிய மக்கள்
மோடியுடன் உரையாடிய அவர்கள், கர்தார்பூர் விவகாரத்தில் தீர்மானமான முடிவு எடுத்ததற்காக நன்றி கூறியதுடன், சீக்கியர்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளைக் கூறி அதற்கு தீர்வு காண முயற்சிகள் எடுக்குமாறும் அன்புடன் வேண்டுகோள் விடுத்தனர்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP