சவாஸ்டீ பிரதமர் மோடி நிகழ்வு : தாய்லாந்து-இந்தியா நட்பு மிகவும் வலுவானது!!

பாங்காக்கில் இன்று நடைபெற்ற "சவாஸ்டீ பிரதமர் மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா-தாய்லாந்து ஆகிய நாடுகளின் நட்பு மிகவும் வலுவானது என்று குறிப்பிட்டுள்ளார்.
 | 

மூன்று நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாங்காக்கில், அவரை பெருமை படுத்தும் வகையில், இன்று நடைபெற்ற ‘சவாஸ்டீ பிரதமர் மோடி’ நிகழ்ச்சியில் தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்களை கண்டு உரையாற்றினார்.

"இந்தியா-தாய்லாந்து இடையான நட்பு, எந்த ஒரு அரசியல் கட்சியாலும் ஏற்படுத்தப்பட்டது இல்லை. பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஓர் நல்ல உறவினால் மெருகேற்றப்பட்டுள்ளது இந்த நட்பு. அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், சில ஆண்டுகள் கழித்து இந்திய பயணம் மேற்கொள்ளும் போது, நிச்சயமாக ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவார்கள்" என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

இதை தொடர்ந்து, இந்த முறை தேர்தலில் தான் அதிகபட்சமான 60,000 வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார் மோடி. 

மேலும், இந்திய மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையே அன்று ஓட்டுக்களாக விழுந்தன. எனவே, அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளதால், அதற்கு தடைகளாக வரும் அனைத்து சவால்களையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP