மிஸ் யுனிவர்ஸ் ஆக பிலிப்பைன்ஸ் அழகி கேத்ரினா தேர்வு....!

தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கேத்ரினா கிரே 2018ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த நேகல் தோல்வியடைந்து வெளியேறினார்.
 | 

மிஸ் யுனிவர்ஸ் ஆக பிலிப்பைன்ஸ் அழகி கேத்ரினா தேர்வு....!

தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கேத்ரினா கிரே மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், 67வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் உள்ளிட்ட 94 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கேத்ரினா கிரே 2018ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தென் ஆப்ரிக்காவை சேர்ந்த முன்னாள் அழகி, டெமி லெய்க் கிரீடம் அணிவித்தார். 

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டாமரின் கிரீன் 2வது இடத்தையும், வெனிசுலாவை சேர்ந்த ஸ்திபானி குட்ரிஸ் 3வது இடத்தையும் வென்றனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP