பெரு நாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

பெருநாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. ஆலன் காரிசியா 1985 முதல் 1990 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் பெரு நாட்டின் அதிபராக இருந்துள்ளார்.
 | 

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

பெருநாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. 

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை தொடர்ந்து, அவரை அவரது வீட்டில் விசாரணை செய்துள்ளனர். விசாரணைக்குப் பின் தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்த அவர் தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  ஆலன் கார்சியாவின் உயிரிழப்பை பெரு நாட்டின் அதிபர் மார்ட்டின் விஜ்காரியா உறுதி செய்துள்ளார்.

உயிரிழந்த ஆலன் கார்சியாவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆலன் காரிசியா 1985 முதல் 1990 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் பெரு நாட்டின் அதிபராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP