Logo

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் பாகிஸ்தான் நடத்தும் நாடகத்தால் எந்த பலனும் இல்லை - ஜெயசங்கர்

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இவர்கள் நடத்தும் நாடகத்தால் எந்த பலனும் இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
 | 

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் பாகிஸ்தான் நடத்தும் நாடகத்தால் எந்த பலனும் இல்லை - ஜெயசங்கர்

"சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இவர்கள் நடத்தும் நாடகத்தால் எந்த பலனும் இல்லை" என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு மாநாடு கடந்த வியாழனன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்ட நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்மூத் குரேஷி, ஜெயசங்கர் வெளியே செல்லும் வரை மாநாட்டில் பங்கு கொள்ளாமல், இந்தியா மீதுள்ள தன் அதிருப்தியை காட்டியுள்ளார்.

சார்க் மாநாட்டில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், "பாகிஸ்தான் தேவையில்லாமல் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுகிறது. பயங்கரவாதத் தாக்குதலுக்கு தயார் என கூறும் பாகிஸ்தானுடன் சண்டையிடத் தெரியாமல் இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பதே இரு நாடுகளுக்கும் நல்லது.மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இவர்கள் நடத்தும் நாடகத்தால் எந்த பலனும் இல்லை " என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டும், வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில், பாகிஸ்தான் அமைச்சர்  மஹ்மூத் குரேஷி உரையாடலின் போது, இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இல்லை என்பதும், பாகிஸ்தானுடனான இருதரப்பு சந்திப்பை இந்தியா நிரகரித்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இரு தினங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையான சந்திப்பின் போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "காஷ்மீரில் நடப்பது மனித உரிமை அத்துமீறல். அதை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுடன் பேச வேண்டும் எனக் கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், "நான் முன்னரே கூறியுள்ளேன். காஷ்மீர் பிரச்னையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவிக்க மேண்டும். இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுமே எனக்கு நெருங்கிய நண்பர்கள். எனவே. நீங்கள் நரேந்திர மோடியுடன் நேரடியாக இந்த விஷயத்தைப் பேசி தீர்த்துக்கொள்வதே, சிறப்பாக இருக்குமென்று நான் கருதுகிறேன்" என்று கூறினார். 

இதனால் மிகவும் கவலையடைந்த பாகிஸ்தான் பிரதமர், "காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் காட்டி வரும் அலட்சிய போக்கு வருத்தமளிக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியப் பிரதேசங்களாக பிரிக்க புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்திய அரசின் இந்த முடிவினை பாகிஸ்தான், சர்வதேச பிரச்சனையாக மாற்றிட முயற்சி செய்து வருவதன் விளைவே இவையனைத்தும்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP