பாகிஸ்தானில் ஏழைகளின் வங்கிக்கணக்கில் புரளும் கோடிகள்!

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் ஏழைகளின் வங்கிகளில் பணத்தை செலுத்துவிட்டு அதன்பின் தங்களின் வசதிக்கேற்ப வெளிநாட்டு வங்கிகளுக்கு பணத்தை மாற்றிக் கொள்வதாக புலனாய்வுத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது
 | 

பாகிஸ்தானில் ஏழைகளின் வங்கிக்கணக்கில் புரளும் கோடிகள்!

பாகிஸ்தானில் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாத ஏழைகளின் கணக்கில் பலநூறு கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருபவர் முகமது ரஷீத். அதுவும் வாடகை ஆட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. தினக்கூலிக்கு வேலை பார்க்கும் இவரால் மொத்தமாக ரூ. 300 கூட வங்கிக்கணக்கில் சேமிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் இவரது வங்கி கணக்கில் 300 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாகிஸ்தான் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவரது வங்கி கணக்கில் இருந்து வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் குற்றமற்றவர் என்று தெளிவாகியுள்ளது.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் ஏழைகளின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்வதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏழைகளின் வங்கிகளில் பணத்தை செலுத்துவிட்டு அதன்பின் தங்களின் வசதிக்கேற்ப வெளிநாட்டு வங்கிகளுக்கு பணத்தை மாற்றிக் கொள்வதாக தெரியவந்துள்ளது. இது போன்ற பல சம்பவங்களால் ஏழை மக்கள் தங்கள் கணக்கில் யார் பணம் போட்டு யார் எடுக்கிறார்கள் என்று தெரியாமல் உள்ளனர்.  முறைகேடாக தாங்கள் சம்பாதித்த பணத்தை, ஐஸ்கிரீம் விற்பவர், ஆட்டோ ஓட்டுநர் கணக்குகளில் பெரும்புள்ளிகள் பரிவர்த்தனை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP