Logo

விண்வெளிக்கு மனிதனை அனுப்புகிறது பாகிஸ்தான் - இந்தியாவுக்கு போட்டியா?

விண்வெளிக்கு தங்கள் நாட்டின் சார்பில் முதன் முதலில் மனிதனை அனுப்பும் திட்டத்தை பாகிஸ்தான் 2022ம் ஆண்டில் மேற்கொள்ளவுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அடுத்த மாதம் 3ம் தேதி சீனா செல்லவுள்ளார்.
 | 

விண்வெளிக்கு மனிதனை அனுப்புகிறது பாகிஸ்தான் - இந்தியாவுக்கு போட்டியா?

விண்வெளிக்கு தங்கள் நாட்டின் சார்பில் முதன் முதலில் மனிதனை அனுப்பும் திட்டத்தை பாகிஸ்தான் 2022ம் ஆண்டில் மேற்கொள்ளவுள்ளது. இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் அந்நாட்டு செய்தித்துறை அமைச்சர் பவாத் சௌத்ரி இத்தகவலை தெரிவித்தார்.

அதே 2022ம் ஆண்டில் இந்தியாவும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. ஆனால், இந்தியாவின் முயற்சிக்கும், பாகிஸ்தானின் முயற்சிக்கும், மாபெரும் வேறுபாடு ஒன்று உள்ளது. அதாவது, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் மேற்கொள்கிறது. இதற்காக சீனாவுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விண்கலத்தை பாகிஸ்தான் அரசு நிறுவனமே தயாரிக்கிறது என்ற போதிலும், அதை விண்ணில் ஏவுவதற்கான வசதிகள் அவர்களிடம் இல்லை. இதனால், விண்கலத்தை தயாரித்த பின், சீனாவுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவோ இஸ்ரோவில் சொந்த முயற்சியில் தயார் செய்யப்படும் விண்கலத்தின் மூலமாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பவுள்ளது. விண்கலத்தை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பமும் நம்மிடம் உள்ளது. இந்தியாவின் இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், விண்வெளிக்கு சொந்த முயற்சியில் மனிதனை அனுப்பிய உலகின் நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். இதற்கு முன்பாக, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக சீனா மட்டுமே இத்திட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அடுத்த மாதம் 3ம் தேதி சீனா செல்லவுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் லி குயாங் உள்ளிட்டோரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP