Logo

கருப்புப் பட்டியலில் இருந்து தற்காலிகமாக தப்பித்திருக்கும் பாகிஸ்தான்

ப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வைத்து நடைபெற்ற பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் குழு சந்திப்பில், பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 4 மாத கால அவகாசத்துடன் சாம்பல் நிறபட்டியலில் பாகிஸ்தான் தொடர அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
 | 

சர்வதேச நிதியத்தின் கீழ் வரும் இந்த பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு, தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்து வருவதாகவும்,  முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தானை, இது குறித்து விளக்கம் கேட்டு, சாம்பல் நிறபட்டியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஏற்கனவே இரண்டு முறை எச்சரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் அதை செய்ய தவறியதால், தற்போது அதனை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆலோசனையில் அக்குழு ஈடுப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், பாகிஸ்தானிற்கு மீண்டும் 4 மாத கால அவகாசம் அளித்து, வரும் பிப்ரவரி 2020 வரை, சாம்பல் நிறபட்டியலில் பாகிஸ்தான் தொடர அந்த அமைப்பு முடிவு செய்து, அக்குழு சந்திப்பின் கடைசி நாளான இன்று அறிவித்துள்ளது.

இந்த 4 மாத கால அவகாசத்திற்கு பின்னரும், பாகிஸ்தான், அதன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு பதிலளிக்க தவறினால், கருப்பு நிறபட்டியலில் நிச்சயமாக வைக்கப்படும் எனவும், பாகிஸ்தான் சர்வதேச பொருளாதார வங்கிகள் எதிலிருந்தும் நிதியுதவிகள் பெற இயலாது எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இம்முறை நடைபெற்ற குழு சந்திப்பில், சீனா, துருக்கி மற்றம் மலேசியா ஆகிய நாடுகள், பயங்கரவாததிற்கு எதிராக பாகிஸ்தான் எடுத்திருக்கும் முயற்சிகளை பாராட்டியதோடு இல்லாமல், அதற்கு மேலும் சில மாத கால அவகாசம் வழங்க பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP