திவால் நிலையை நோக்கி செல்கிறது பாகிஸ்தான்: இம்ரான் கான் வருத்தம்

பாகிஸ்தான் நாட்டின் நிதி நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், நாடு திவால் நிலையை நோக்கி செல்வதாகவும், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 | 

இதுகுறித்து, அந்நாட்டு பார்லிமென்ட்டில் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: ‛‛பாகிஸ்தானின் நிதி நிலை மிகவும் மாேசமாக உள்ளது. நாட்டின் கடன் தொகை மிகவும் அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வெனிசுலாவைப் போல், பாகிஸ்தானும் திவால் நிலையை சந்திப்பதை தவிர்க்க முடியாது. 

ஏற்கனவே நம் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, யு.ஏ.இ., மற்றும் சீனா ஆகிய நாடுகள் உதவி புரிந்துள்ளன. எனினும், நாட்டின் தற்போதைய நிதி நிலை முன் எப்போதும் இல்லாத வகையில் மாேசமான கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டை தொடர்ந்து நடத்தும் அளவு அமெரிக்க டாலர் நம் கையிருப்பில் இல்லை என்பதே உண்மை. 

இந்த நிலை விரைவில் சரியாகாவிட்டால், நாடு மிக மாேசமான நிலையை சந்திப்பதை யாராலும் தடுக்க முடியாது’’ என அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP