இந்திய துாதரக அதிகாரிகளுக்கு பாக்., உளவுத்துறை மிரட்டல்

பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய துாதரக அதிகாரிகளுக்கு, அந்நாட்டை சேர்ந்த, உளவுத்துறை அதிகாரிகள் மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 | 

டெல்லியில் உள்ள பாக்., துாதரக அலுவலகத்தில் பணியாற்றும் அந்நாட்டு அதிகாரி, நம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது. 

இது குறித்து விளக்கம் கேட்டு, அந்நாட்டு துாதரக அதிகாரிக்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. 

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்லாமாபாத்தில் பணியாற்றும் இந்திய துாதரக அதிகாரிகள் இருவரை, பாக்., உளவுத்துறை அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பாக்., உளவுத்துறையின் இந்த செயலுக்கு, வெளியுறவு  அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இனியும்  இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP