பாக்., சுதந்திரதினம்: இனிப்பு பரிமாற்றம் இல்லை

பாக்., சுதந்திரதினம்: இனிப்பு பரிமாற்றம் இல்லை
 | 

பாக்., சுதந்திரதினம்: இனிப்பு பரிமாற்றம் இல்லை

பாக்கிஸ்தான் சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்தியா - பாக்., வீரர்களிடையே நடைபெறும் இனிப்பு பரிமாற்றம் இந்த ஆண்டு நடைபெறவில்லை. 

ஒவ்வொரு ஆண்டும் இரு நாடுகளின் சுதந்திரதினத்தன்று, இரு நாடுகளை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையை சற்றும் எதிர்பாராத பாக்கிஸ்தான் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

இதையடுத்து, தங்கள் நாட்டு சுதந்திரத்தினமான இன்று நம் வீரர்களுக்கு பாக்கிஸ்தான் வீரர்கள் இனிப்பு வழங்கவில்லை. இதன் மூலம் பாக்., அதன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP