Logo

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆக்சிஜன் கசிவு!

சர்வதேச விண்வெளி மையத்தின் ரஷ்ய பகுதியில் சிறிய பாதிப்பு ஏற்பட்டதால், காற்று கசியத் துவங்கியது. இதை சரிசெய்யும் பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 | 

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆக்சிஜன் கசிவு!

சர்வதேச விண்வெளி மையத்தின் ரஷ்ய பகுதியில் சிறிய பாதிப்பு ஏற்பட்டதால், காற்று கசியத் துவங்கியது. இதை சரிசெய்யும் பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன், சர்வதேச விண்வெளி மையத்தின் ரஷ்ய பகுதியில் கசிவு ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். சுமார் 2 மிமீ அகலம் கொண்ட ஒரு சிறு துளை மூலமாக காற்று கசிந்துள்ளது. இது சரி கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால், 18 நாட்களில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ளவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமாம். இந்நிலையில் இந்த காற்று கசிவினை சரி செய்ய விண்வெளி வீரர்கள் அமெரிக்கா, மாஸ்கோவிலுள்ள கட்டுபாட்டு மையங்களுடன் சேர்ந்து முயற்சித்தனர். ஒரு வீரர் தனது விரலை வைத்து சிறிது நேரம் துளையை அடைத்து வைத்தார். அதன்பின், ஒரு திரவியத்தை செலுத்தி ஓட்டையை அடைக்க முயற்சி செய்துள்ளனர். 

விண்ணில் சுற்றி வரும் பழைய செயலிழந்த செயற்கைக் கோள்களின் துகள்கள், விண்வெளி மையத்தின் மீது வேகமாக மோதியதால் இந்த துளை ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் விண்வெளி மையத்தில் உள்ளவர்களுக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP