நியூஸிலாந்து மசூதி தாக்குதல் தொடர்பாக 15 லட்சம் வீடியோக்கள் நீக்கம் - பேஸ்புக் தகவல்

நியூஸிலாந்தின் கிரைஸ்டுசர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பான 15 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளோம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 | 

முன்னதாக, இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதி, அதை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பினார். இரண்டு மசூதிகளில் 50 பேரை பலி வாங்கிய அந்தத் தாக்குதல் தொடர்பாக 17 நிமிடங்கள் ஓடக் கூடியதாக வீடியோ இருந்தது. வீடியோவை பலரும் பகிர்ந்தனர். யூ டியூப், டுவிட்டர் போன்ற தளங்களுக்கும் பரவியது. இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளிக்கையில், முதல் 24 மணி நேரத்துக்குள்ளாக 15 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டன என்று 12 லட்சம் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தினோம் என்றும் தெரிவித்துள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP