ஒசாமா பின்லேடன் மகன் ஹம்ஸா சுட்டுக்கொலை?

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் இறந்திருக்கலாம் என அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 | 

ஒசாமா பின்லேடன் மகன் ஹம்ஸா சுட்டுக்கொலை?

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன்  இறந்திருக்கலாம் என அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து அவரது மகன் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக வளர்ந்து வந்தார். மேலும், தந்தையை கொலை செய்த அமெரிக்காவை பழிவாங்குவேன் என ஹம்ஸா அச்சுறுத்தி வந்தார். 

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஹம்ஸா பின்லேடனை உலகளாவிய பயங்கரவாதியாக  அமெரிக்கா அறிவித்தது. மேலும், ஹம்ஸா பின்லேடன் இருக்கும் இடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) பரிசாக வழங்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது. 

இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா அதிகாரிகள் கூறியிருப்பதாக என்.பி.சி நேற்று செய்தி வெளியிட்டது. ஆனால், ஹம்சா எங்கு, எப்போது, எப்படி இறந்தார் என்ற முழுவிபரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP